chennireporters.com

துபாயில் நெருங்கிய போலீஸ் கைதாகும் ஆர்.கே சுரேஷ் சிக்கும் முக்கிய தலைகள்.

 ஆருத்ரா மோசடி வழக்கில் துபாயில் பதுங்கியுள்ள நடிகர்  ஆர்.கே சுரேஷை  தமிழக போலிசார் சுற்றி வளைத்தனர் என்றும் அவர்  அப்ரூவர் ஆகிறார் என்றும் அவர் அளிக்க உள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில்  பெரிய தலைகள் சிக்கப்போகிறார்கள்  என்று  சொல்கின்றனர் பொருளாதார குற்றப்பிரிவு போலிசார்.

நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.இந்த நிலையில் துபாயில் தலைமறைவாக உள்ள ஆர்.கே.சுரேஷை தமிழக போலிசார் சுற்றி வளைத்துவிட்டதாக கூறப்படுகிறது.  அவரை கைது செய்து தமிழகம் கொண்டு வர போலிசார் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஆருத்ரா மோசடி புகாரில் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளதால் அவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. ஆருத்ரா நிறுவன மோசடி வேலூரை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை,திருவள்ளூர் , காஞ்சிபுரம்,வேலூர், திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில்  நிறுவனம் நடத்தி வந்தனர்.

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடுசெய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் வரை இந்த பணத்தை தருவதாக பொது மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். மேலும் முதிர்வு காலத்தில்  பொதுமக்களுக்கு ரூ 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி முதலீடு செய்ய மக்கள் அதிக அளவில் குவிந்தனர். கடைசியில் மக்களை அந்த நிறுவனம்  ஏமாற்றி விட்டது. இந்த நிலையில்தான் ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஆரிசுக்கு கட்சியில் பதவி கொடுத்தார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த வழக்கில் தொடர்புடைய ஆர்.கே சுரேஷ் துபாயில் கைதாக இருக்கிறாராம். கைதிகள் பரிமாற்றம் மூலம்,  துபாய் போலீஸ் மூலம் ஆர். கே சுரேஷ்கைது செய்யப்படுவார். இங்கே உள்ளே துபாய் கைதி ஒருவரை பரிமாற்றி அதன்மூலம் ஆர்.கே சுரேஷை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர உள்ளனர். ஆர்.கே சுரேஷ் தமிழ்நாடு வரும் பட்சத்தில் அவரை அப்ரூவர் ஆக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய தலைகளை  கைது செய்ய தமிழ்நாடு போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கில் மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர் . அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி, பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், உள்ளிட்ட 11 பேர் இதுவரை கைதும் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்டவிசாரணையில் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டன. அதேபோல் பல கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மீட்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவு சம்மன் அனுப்பினர். ஆனால் விசாரணைக்கு வராமல் தலைமறைவானார்.  இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், பட தயாரிப்பு தொடர்பாக ரூசோ தம்மை அணுகியதாகவும், அது தொடர்பாக மட்டுமே பண பரிவர்த்தனை நடந்ததாக கூறியுள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருப்பதால், விசாரணைக்கு நேரடியாக ஆஜராக இயலாது என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆர்.கே.சுரேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த விவகாரத்தில் தம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், தமக்கும் ஆரூத்ரா நிறுவனத்தின் மோசடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வாதிட்டார்.

அப்போது நீதிபதி, ஆவணங்களுடன் ஆஜராகும்படி அனுப்பப்பட்டுள்ள சம்மனில், எந்த மாதிரியான ஆவணங்கள் போன்ற விவரங்கள் இல்லை என்பதால் சம்மனை ரத்து செய்யப் போவதாகவும், வேண்டுமானால் தேவையான விவரங்களுடன் புதிய சம்மனை அனுப்பும்படியும் காவல்துறையிடம் தெரிவித்தார். காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, சம்மனை ரத்து செய்ய வேண்டாம் எனவும், இந்த சம்மன் அனுப்பபட்டது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.இந்த ஆருத்ரா ஹாரிஸ் தான் சமீபத்தில் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில இந்த மோசடி குறித்து  முதல்வர் ஸ்டாலின் சட்ட சபையில் நேரடியாக பேசினார். அதில், மக்களிடம் அதிகம் வட்டி அதாவது 23 முதல் 30 சதவிகிதம் மாத வட்டி கொடுப்பதாக கூறி மக்களிடம் இருந்து பணத்தை பெற்று உள்ளனர். கிட்டத்தட்ட 1 லட்சம் பேரிடம் இவர்கள் முதலீட்டை பெற்று உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 243 கோடி ரூபாய்க்கு முதலீடு பெற்று , அதை திருப்பியும் தராமல் மக்களை  ஏமாற்றி உள்ளனர். இது தொடர்பாக பலர் புகார்களை அளித்துள்ளனர்.

அந்த புகார்கள் மீது  வழக்கு பதிவு செய்து  உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். 6 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. இதில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் இந்த விவகாரத்தில் வெளிநாடு தப்பி சென்ற ராஜசேகர், ஷாராணி ஆகியோர் ரெட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதேபோன்ற மோசடியில் ஈடுபட்ட வேறு நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க.!