ஆவடி மாநகரப் பேருந்து பணிமனையின் கிளை மேலாளர் யுவராஜ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த குற்றச்சாட்டுகள் குறித்து கடந்த 10 தினங்களுக்கு முன்பு நாம் அவரை தொடர்பு கொண்டோம் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. நாம் அவரது whatsapp எண்ணிற்கு தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் தரப்பு விளக்கம் தேவைப்படுகிறது என்று செய்தி அனுப்பி இருந்தோம்.
ஆவடி மாநகரப் பேருந்து பணிமனையின் கிளை மேலாளர் யுவராஜ்
அந்த செய்திக்கு இதுவரை அவரிடம் இருந்து எந்த பதிலும் வழங்கப்படவில்லை அவர் ஆவடி மாநகர பணிமனையின் கிளை மேலாளராக பணிக்கு சேர்ந்த நாள் முதல் எந்தெந்த வேலைகளுக்கு எவ்வளவு லஞ்சம் வாங்க வேண்டும் என்று ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொண்டு ஒரு கட்டணத்தை நிர்ணயித்து உள்ளார். அதாவது வார விடுமுறை ஓய்வு வழங்குவதற்கு ரூபாய் 3 ஆயிரத்தில் இருந்து 5,000 வரை பெற்றுக் கொள்ளுகிறார். ஆஃப்ரோலின் வழங்குவதற்கு 10,000 நிர்ணயித்திருக்கிறார்.
போஸ்டிங்கை மாற்றுவதற்கு குறிப்பாக முதியோர் இலவச பாஸ் வழங்கும் வேலை செய்வதற்கு இரண்டு பேரிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார். அது தவிர போஸ்டிங்கை மாற்றுவதற்கு 134 பேரின் வழக்கமான போஸ்டிங் மாற்றி உத்தரவிட்டு அதன் மூலம் தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் பத்தாயிரம் ரூபாயும் எதிரணியை சேர்ந்தவரிடம் 25 ஆயிரம் ரூபாயும் பெற்றிருக்கிறார்.
avadi bus depot
இதுபோன்று பெறப்படும் கட்டணங்களை தன் மனைவியின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் செலுத்துமாறு தனக்கு வேண்டப்பட்ட பணியாளர் மூலம் வங்கியில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. அது தவிர ஏற்கனவே பணியாற்றிய இடங்களில் டீசலையும் திருடி விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் மீது துறை ரீதியான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
ஆவடி பணிமனைக்கு வந்த பிறகும் இதே போன்று டீசல் திரட்டில் ஈடுபட்டு இருப்பதாக ஆவடி பணிமனை தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த சில பொறுப்பாளர்கள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கும், மேலான் போக்குவரத்து இயக்குனர்களும் புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
[அல்ஃபி ஜான் வர்கீஸ்]
A.யுவராஜ் (A:50190)அவர்கள் 13/7/2023 அன்று தமிழ்நாடு அரசு மாநகர் போக்குவரத்துக் கழகம், ஆவடி பணிமனையின் கிளை மேலாளராக பொறுப்பேற்றார். யுவராஜ் அவர்கள் எந்த பணிமனைக்கு சென்றாலும் அங்குள்ள ஆளும் கட்சிக்காரர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு தொழிலாளர்களிடமிருந்து ஒரு கணிசமான தொகையை பெற்று விடுகிறார்.
ஆவடி பணிமனையில் உள்ள தொழில்நுட்ப பணியாளர் திரு.ராஜ்குமார், நடத்துனர் ரமேஷ் பாபு மற்றும் கணினி பிரிவில் உள்ள திரு.பிரதீப் இவர்கள் தொழிலாளர்களிடமிருந்து வசூல் செய்யும் தொகையை ஆவடி கிளை மேலாளர் யுவராஜியின் மனைவி கோமதி யுவராஜ் அவர்கள் சேமிப்பு கணக்கில் லஞ்சப்பணத்தை செலுத்துவார்கள்.
ICICI BANK NANDANAM BRANCH ACCOUNT NUMBER:602801511104
யுவராஜ் அவர்கள் கிளை மேலாளராக பதவியேற்று நான்கு மாதத்திற்குள் 132 தொழிலாளர்களின் போஸ்டிங்கை(posting)மாற்றியுள்ளார், மற்றும் வார ஓய்வு கிழமைகள் மாற்றியுள்ளார். எதற்காக இப்படி மாற்றுகிறீர்கள் என்று கேட்கும் தொழிலாளர்களுக்கு விடுப்பு அனுமதி வழங்க மறுத்து (absent) A போடுவது, பணி வழங்காமல் வீட்டிற்கு திருப்பி அனுப்புவது , இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார் .
தினந்தோறும் 150 க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் இயக்கப்பட்ட ஆவடி பணிமனையில் யுவராஜ் அவர்கள் கிளை மேலாளராக பதவியேற்ற பிறகு நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 பேருந்துகள் வரை இயக்கப்படாமல் நிறுத்தப்படுகிறது. கிளை மேலாளர் அவர்கள் இதுபோன்ற தேவையற்ற செயல்களில் கவனம் செலுத்துவதால் தொழிலாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. பயணிகளுக்கு பேருந்து சேவையும் தடைபடுகிறது.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர்
போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு பொதுமக்கள் மத்தியில் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரும் ஏற்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் (MD ) அவர்கள்
ஆவடி பணிமனை கிளை மேலாளர் யுவராஜ் அவர்கள் இது போன்ற பழி வாங்கும் செயல்களில் ஈடுபடாத வண்ணம் அவர் மீது துறை ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.