இந்த அதிகாரி நமது அலுவலகத்திற்கு தேவையில்லை இவர் ஒரு பெண் இச்சை உள்ளவர் என்று ஒருவர் பெயரை கேட்டவுடன் அலுவலகத்தில் உள்ள பெண் ஊழியர்கள் கதறி துடிக்கிறார்களாம் இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பபட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது புழல் பகுதி. இந்த பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு மணி சேகர் என்பவர் புதிய வட்டார வளர்ச்சி அலுவலராக பொறுப்பேற்றுள்ளார். இந்த மணி சேகர் ஏற்கனவே பணியாற்றிய சோழவரம், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி போன்ற பகுதிகளில் மைனர் மாப்பிள்ளை போலவே பணியாற்றியவர். அந்த அலுவலகத்தில் உள்ள சில அழகான பெண் அலுவலர்களை பார்த்தால் அசடு வழிவாராம்.
கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர். ஐ.ஏ.எஸ்
ஏற்கனவே இவர் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றிய போதும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றிய போது அங்கிருந்த பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அங்கு பணியாற்றிய ஒரு பெண்ணுக்கும் இவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு அந்த பெண் தாய்மை அடையும் நிலை வரை சென்றாராம். இது தொடர்பாக மணிசேகரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் அப்போதைய மாவட்ட ஆட்சியர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மணிசேகர் நிவாரணமும் வழங்கியதாக கூறப்படுகிறது.
மாதாவரம் எம்எல்ஏ சுதர்சனம்.
இப்படி தன்னுடன் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பாய் இருக்கவேண்டிய இவர் அத்துமீறலில் ஈடுபடுவதால் பெண் ஊழியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இவரை புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்துள்ளது. அது தவிர இவர் நெடுவரவாக்கம் என்கிற கிராமத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பங்களா கட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரே அலுவலகத்தில் தனது உறவினர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கனவே புழல் ஊராட்சி அலுவலகத்தில் மேனேஜராக பணியாற்றிய போது பல லட்ச ரூபாய் முறைகேடாக திருட்டு கணக்கெழுதி பல லட்சங்களை சுருட்டியவர் என்கின்றனர். அது தவிற சோழவரம் பிடிஒ அலுவலகத்தில் பணியாற்றிய போது 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அம்மா சிமென்ட் திருடி விற்ற குற்றசாட்டில் சிக்கியுள்ளார். அது தொடர்பாக தற்போதைய மாதாவரம் திமுக எம்எல்ஏ சுதர்ணனம் பல பொது கூட்டங்களில் மனிசேகர் செய்த ஊழல் குறித்து மேடையில் பேசியுள்ளார். இந்த அலுவலகத்தில் பணியாற்றி ஒரு டிஆர்ஓ வின் அப்பா மணி சேகர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைக்கிறார்.
பி.டி.ஒ. மணி சேகர்
இந்த அலுவலகத்திற்கு வரவேண்டும் என்பதற்காக ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய புள்ளியிடம் பல லட்சம் பணம் கொடுத்து இந்த பதவிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இன்னும் சில நாட்கள் கழித்து தான் மணி சேகரின் ஆட்டம் என்னவென்று தெரியும் என்கின்றார்கள் ஊழியர்கள். தான் வேலைக்கு வருவதற்கு முன்னவே நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்று தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் ஏகத்தாளமாய் பேசி வருகிறாராம் மணி சேகர்.