chennireporters.com

50 கோடி ரூபாய் கட்டப்பஞ்சாயத்து செய்த சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர்.

#exclusive story…#exclusive story…#exclusive story…

பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சட்ட விரோதமாக கடத்தி கமிஷனர் அறையிலேயே அடைத்து வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர்.  இந்த செய்தி போலிஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் தற்போது காட்டு தீயாய் பரவி வருகிறது. சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.

24 மணிநேரத்தில் ரூ.50 கோடி பணத்தை செட்டில் மென்ட் செய்ய உதவியுள்ளார் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர். சென்னை பெருங்குடியில் இயங்கிவரும் பிரபல கட்டுமான நிறுவனம் Ocean Lifespaces India Private Limited. இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக இருப்பவர் S.K.பீட்டர். இதே நிறுவனத்தில் இயக்குனராக இருந்தவரின் பெயர் பாலசுப்ரமணியம் ஸ்ரீராம்  ஓசன் லைப் ஸ்பேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் (extraordinary general meeting) எக்ஸாடினரி ஜெனரல் மீட்டிங் கடந்த 03-08-20 ம் தேதியன்று நடந்தபோது, நிறுவனத்தின் இயக்குனராக இருந்த பாலசுப்ரமணியம் ஸ்ரீராம் இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தன்னுடைய நீக்கத்தை எதிர்த்து பாலசுப்ரமணியம் ஸ்ரீராம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார்.பாலசுப்ரமணியம் ஸ்ரீராம்.

இந்த வழக்கு சென்னையில் உள்ள NCLT நீதிமன்றம் எண்-1-ல் நடந்து வருகிறது.
கம்பெனி விவகாரம் தொடர்பாக நடந்து வரும் இந்த வழக்கில் கடந்த10-11-23 அன்று எதிர்மனுதாரர் ஓசன் லைப் ஸ்பேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ் ராமன் ஆஜரானார்.

நீதிபதி ராமலிங்கம் சுதாகர்,தொழிநுட்ப உறுப்பினர் வெங்கடராமன் சுப்பிரமணியம் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீது திடுக்கிடும் புகார்களை மூத்த வழக்கறிஞர் பி.எஸ் ராமன் தீர்ப்பாயத்தில் தெரிவித்தார்.

Ocean Lifespaces India Private Limited(ஓசன் லைப் ஸ்பேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ).

ஓசன் லைப் ஸ்பேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்MD,S.K.பீட்டரை சென்னை மத்திய பிரிவு போலீசார் கட்டாயப்படுத்தி செட்டில்மென்ட் அக்ரீமெண்ட்டில் கையெப்பம் வாங்கியுள்ளதாக NCLT நீதிமன்றத்தில் புகார் கூறியுள்ளார்.Additional deputy commissioner முத்துவேல் பாண்டி.

உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் ஓசன் லைப் ஸ்பேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் MD, S.K.பீட்டரிடம் இருந்து ரூ.50 கோடி பணம் வலுக்கட்டாயமாக மிரட்டி வசூலிக்கப்பட்டிருப்பதாக மூத்த வழக்கறிஞர் பி.எஸ் ராமன் தெரிவித்துள்ளார்

மேலும்,ஓசன் லைப் ஸ்பேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் MD S.K.பீட்டரை சட்டவிரோதமாக கடத்திச்சென்று, ரூ.50 கோடியை பணம் பறித்த விவகாரம் குறித்து சட்டப்படி விசாரிக்கப்படவேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் பி.எஸ் ராமன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் குறித்து மூத்த வழக்கறிஞர் பி.எஸ் ராமன்NCLT நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ocean Lifespaces expects to end FY23 with ₹1,000 crore turnover - The Hindu BusinessLine

MD S.K.பீட்டர்.    

அதில்,கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சி.சி.பியின் அடிஷனல் டெபுடி கமிஷ்னர் முத்துவேல் பாண்டி, கமிஷனரின் உதவியாளராக இருக்கும் சரவணன் பெருமாள் நேரடியாக ஆள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன்.

இவ்வளவு பெரிய உயரிய பொறுப்பில் இருக்கும் போலீஸ் அதிகாரி
கட்டப்பஞ்சாயத்து மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடுவாரா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம் கடந்த 27-09-23 அன்றுNCLT நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தீர்பாயத்திற்கு வெளியே செட்டில்மென்ட் செய்வதற்கான முயற்சிகள் நடக்கிறது என்று NCLT நீதிமன்றத்தில் மனுதாரர் பாலசுப்ரமணியம் மற்றும் எதிர்மனுதாரர் SK பீட்டர் தரப்பு வழக்கறிஞர்களால் தெரிவிக்கப்பட்டது.புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்! சென்னை பெருநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர்சந்தீப் ராய் ரத்தோர்.

அதே சமயம் 27-09-23 தேதியன்று எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயகுமார் வெளிப்படையாகவும்,சட்டத்திற்குட்பட்டும் செட்டில்மென்ட் நடக்கவேண்டுமென்று NCLT நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதாவது 27-09-23 ம் தேதிக்கும் 10-11-23 க்கும் இடையில் தான் நிறுவனத்தின் ஓசன் லைப் ஸ்பேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் MD, S.K.பீட்டரை சட்டவிரோதமாக கடத்திச்சென்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரூ.50 கோடி பணத்திற்கான செட்டில்மென்டை முடித்து கொடுத்துள்ளனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து தான் NCLT நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் P.S.ராமன் 10-12-23 அன்று எழுத்துப்பூர்வமாகவே  புகார் தெரிவித்துள்ளார். அதில் அதிரவைக்கும் உண்மைகளை கூறியுள்ளார்.சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரின் அலுவலகத்தில் விடிய விடிய ஓசன் லைப் ஸ்பேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்தின் MD S.K.பீட்டர் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரின் நேரடி உத்தரவு மற்றும் மேற்பார்வையில் ஆள் கடத்தல்,கட்டப்பஞ்சாயத்து ஆகியவை கமிஷனர் அலுவலகத்திலேயே நடந்துள்ளது. ஓசன் லைப் ஸ்பேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்நிறுவனத்தின் MD S.K.பீட்டர் தரப்பினரிடம் இருந்து 24 மணிநேரத்தில் ரூ.50 கோடி பணம் ரொக்கமாக சட்டத்திற்கு விரோதமாக பறிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகே,S.K பீட்டர் விடுவிக்கப்பட்டுள்ளார். அதோடு இந்த விஷயத்தை வெளியில் தெரிவிக்கக்கூடாதென பகிரங்கமாக மத்திய குற்றப்பிரிவு Additional deputy commissioner முத்துவேல் பாண்டியால் மிரட்டியுள்ளார். NCLT தீர்ப்பாயத்தில் நடந்து வரும் வழக்கின் விவகாரத்தில் நேரடியாக சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ஈடுபட்டதற்கு என்ன காரணம் ?சட்டத்திற்கு புறம்பாக ஓசன் லைப் ஸ்பேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் MD,S.K.பீட்டரை சட்டவிரோதமாக கடத்தி சென்று ஆணையரின் அலுவலகத்திலேயே விடிய விடிய அடைத்து வைத்ததற்கு என்ன காரணம் ? யாருடைய உத்தரவின் பேரில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஓசன் லைப் ஸ்பேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் MD S.K.பீட்டரிடம் ரூ.50 கோடி பணத்தை பறிக்கும் நடவடிக்கையில் இறங்கினார் ?

டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேரடியாக ஆள்கடத்தல், மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதன் பின்னணியில் இருப்பது யார் ?

MD S.K.பீட்டர்

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய உயர் போலிஸ் அதிகாரியான  சந்தீப் ராய் ரத்தோர் இப்படி நேரடியாக ஆள்கடத்தல் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதற்கு பின்னணியில் அரசியல் தலையீடுகள் இருக்கிறதா ?

இப்படி பல கேள்விகள் இந்த விவகாரத்தின் பின்னணியில் இருக்கிறது. NCLT நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும்12-01-24 ம் தேதியன்று நடைபெறவுள்ளது. அப்போது இந்த விவகாரம் இன்னும்  பெரிய பூகம்பமாக மாற வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் .

மகாபலிபுரம் சாலையில் போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் கட்டி வரும் சொகுசு மாளிகை வீட்டிற்கு பாலசுப்ரமணியம் ஸ்ரீராம் பெரும் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அங்கு கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு சவுடு மண் எடுப்பதில் தகராறு ஏற்பட்டு கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அது தவிர இந்த விஷயத்தில் முக்கிய அரசியல் விஐபியின் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறது . அது தவிர வடமாநிலத்தை சேர்ந்த சென்னையில் உள்ள மிகப்பெரிய வியாபாரங்களில் கொடி கட்டி வரும் இந்தி வாலாக்களுக்கு இந்திகாரர்களுக்கு போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் உதவி செய்து வருவதாக ஒரு பேச்சு வெளிப்படையாகவே பேசப்பட்டு வருகிறது.

#exclusive story…#exclusive story…#exclusive story…

இதையும் படிங்க.!