chennireporters.com

ரெட்டில்ஸ் அருகே இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொலை. போலீசுக்கு கைமாறிய கோடிகள்.

இன்று அதிகாலை (அக்டோபர் 12 ம்தேதி) ரெட்டில்ஸ் அருகே மாரம்பேடு என்ற இடத்தில் இரண்டு ரவுடிகளை போலிசார் சுட்டு கொலை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

ரெட்டில்ஸ் செம்மர கடத்தல் வியாபாரி பார்த்திபன்  கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி வியாழக்கிழமை காலை நடை பயணம் சென்ற போது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பார்த்திபன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த முத்து சரவணன்  என்பவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் முத்து சரவணன் கடந்த இரு தினங்களுக்கு முன்பே டெல்லியில் மாதவரம் மாதவரம் காவல் உதவி ஆணையர் ஜவகர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து செங்குன்றம் பகுதியில் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் முத்து சரவணன் மற்றும் சண்டே சதீஷ் ஆகிய இருவரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடும் போது போலீசார் அவர்களை சுட்டனர். அதில் முத்து சரவணன் மற்றும் சண்டே சதீஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களது உடலை மருத்துவ பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து உளவுத்துறை போலீசார் சிலர் நம்மிடம் முத்து சரவணன் கொலை செய்யப்பட்ட பார்த்திபனுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. எண்ணூர் தனசேகரன், பார்த்தீபன் மற்றும் சில ரௌடிகள் முத்து சரவணனின் வளர்ச்சி தாங்க முடியாமல் முத்து சரவணனை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது அது தவிர மேலும் ரெட்டில்ஸில் உள்ள டோல்கேட்டில் முத்து சரவணன் பார்த்திபனிடம் பணம் கேட்டதாகவும் அதற்கு பார்த்திபன் பணம் தர மறுத்து நீ சின்னப் பையன் உன்னை காலி செய்து விடுவேன் என்று கேலி செய்து சிரித்ததாக கூறப்படுகிறது. அது தவிர எண்ணூர் தனசேகரன் பார்த்திபனிடம் அவன் சின்ன பையன் அவனுக்கு எல்லாம் நீங்கள் பணம் தர வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியதாகவும் தகவல் சொல்லுகின்றனர். இந்த நிலையில் கோபமடைந்த முத்து சரவணன் ஆகஸ்ட் 17ஆம் தேதி வியாழக்கிழமை நடை பயிற்சி மேற்கொண்டு இருந்த பார்த்திபனை மோட்டார் பைக்கில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது.

பார்த்திபன் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 56 நாட்கள் ஆகிறது.

பார்த்திபன்

இந்த நிலையில் கோடிகளில் வாழ்ந்த பார்த்திபன் குடும்பத்தினர் பழிக்கு பழி தீர்க்க அவர்களும் சில கூலிப்படையினரை  வைத்து முத்து சரவணனை தேடி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் முத்து சரவணனனை அவர்களால் நெருங்க முடியவில்லை. இந்த நிலையில் சில விஐபிகள் மூலம் போலீஸ் அதிகாரிகளை சந்தித்த பார்த்திபன் தரப்பினர் பார்த்தீபன் கொலை செய்யப்பட்ட வியாழக்கிழமை தினமே ரெட்டில்ஸ் பகுதியிலேயே அவர்களை என்கவுண்டர் செய்ய மிகப்பெரிய தொகையை கொடுத்ததாக முத்து சரவணன் தரப்பினர் சொல்லுகிறார்கள்.இந்த நிலையில் போலீசார் முத்து சரவணனை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கும் போது போலீசாரை தாக்கி விட்டு தப்பித்த போது நடந்த சண்டையில் போலீசார் அவர்களை சுட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.

சங்கர். போலீஸ் கமிஷனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பே முத்து சரவணனை போலீசார் என்கவுண்டர் செய்து விட்டதாக பத்திரிகையாளர்கள் வட்டாரத்தில் செய்தி காட்டுத்தீயாய் பரவி வந்தது. ஐந்து தினங்களுக்கு முன்பு முத்து சரவணனின் அப்பா போலீசில் தன் மகனை  சுட்டு கொலை செய்து விடுவார்கள் என்று புகார் அளித்திருந்தார்.  சென்னையில் உள்ள ரவுடிகள் தற்போது அச்சத்தில் உள்ளனர். மும்பையில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி படப்பை குணா இரண்டு தினங்களுக்கு முன்பு போலீசில் சரணடைந்தார். தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடி கும்பல், கூலிப்படையினர், பிரபல தாதாக்கள் அனைவரும் போலீசாரின் துப்பாக்கிக்கு பயந்து பதுங்கி  தலைமறைவாக உள்ளனர்.

இதையும் படிங்க.!