chennireporters.com

#digital; தொழில்நுட்பமும், செயற்கை நுண்ணறிவும் வருங்காலத்தில் #advocates# தொழிலுக்கு அவசியம் நீதிபதி பேச்சு.

வருங்காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பமும், செயற்கை நுண்ணறிவும் வழக்கறிஞர் தொழிலுக்கு அவசியம் என்று சென்னை தனியார் சட்ட கல்லூரி மாணவர்களிடம் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேசினார்.

#digital I #Consumer digital I #currencydigital banking I #science and technology I #bnpl #sathyabama I #law College #former justice mugamadu jiyauddin #Tamil Nadu state law language member

சென்னை சத்தியமாமா அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் சத்தியபாமா சட்டக் கல்லூரியும் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பும் இணைந்து நியாயமான டிஜிட்டல் நிதி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.சத்தியபாமா சட்ட கல்லூரியில் முதல்வர் டாக்டர் தில்ஷாத் வரவேற்புரை ஆற்றினார். ஜானகிராமன் துவக்க உரை ஆற்றினார். பி எஸ் அப்துர் ரஹ்மான் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவி பேராசிரியர் டாக்டர் சரவணன், தனியார் வங்கி நிதி ஆலோசகர் எம். பி. பரமேஸ்வரி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேனாள் மாவட்ட நீதிபதியும் தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினருமான நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது வருங்காலத்தில் வழக்கறிஞர் தொழிலில் இன்றியமையாததாக தகவல் தொழில்நுட்பமும் ஆர்டிபீசியல் இன்டலிஜன்ஸ் என்று சொல்லக்கூடிய செயற்கை நுண்ணறிவும் இருக்கப் போகிறது என்றும் வழக்கறிஞர்கள் செயற்கை நுண்ணறிவு துறை பற்றி ஆழமாக அறிந்து கொள்வது அவசியம் என்றும் கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது:-2024 ஆம் ஆண்டு டிஜிட்டல் முறையில் வங்கிகளைப் பயன்படுத்தக்கூடியவர்கள் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இருக்கப்போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அதிக அளவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் நிதி சேவைகளில், விரைவான, செலவு குறைந்த வங்கி பரிவர்த்தனைகளும், மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவையும் இருப்பதாக பொது மக்கள் உணர்கிறார்கள். ஆனால், இதில் வங்கிப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதையும் நாம் மறுக்க முடியாது. அதே நேரத்தில் அவசரமான உலகத்தில் நிதி செயல் முறைகளில் மேம்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் மூலம் பணம் செலுத்துவதும், கடன் பெறுதல் மற்றும் கடனை திரும்ப செலுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் நிறுவனங்களின் நிதி மேலாண்மையும் சுலபமாக நடைபெறுகிறது.செயற்கை நுண்ணறிவு சமூக வலைப்பின்னல்கள் மூலமாக அதிவேகமாக பயன்பாடுகள் மொபைல் போன் மூலமாகவே பணப்பதிவர்த்தனைகள் வணிகத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. புதிதாக காப்பீடு எடுப்பதில் கூட டிஜிட்டல் முறையில் மிக சுலபமான நடைமுறைகளாகிவிட்டது. ஆனால் டிஜிட்டல் நிதி பண பரிமாற்றத்தில் இன்னும் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்.

மிக அதிகமான பன்னாட்டு தயாரிப்புகள் விற்பனைக்கு புதிது புதிதாக அறிமுகம் ஆகும் நிலையில் (BNPL) பிஎன்பிஎல் என்று சொல்லக்கூடிய இப்போது பொருட்களை வாங்குங்கள் பிறகு பணத்தை செலுத்துங்கள் என்று சொல்லுகிற விளம்பரங்கள் கடன் வழங்குவதற்காக அதிகமாக வருகிற அழைப்புகள் இளைஞர்களை வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கிறது. இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.டிஜிட்டல் தொழில் நுட்ப வேகமான வளர்ச்சியில் நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பது அவசியமாகும். நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்கவும், குறைகளைத் தீர்க்கவும் 1986இல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 இயற்றப்பட்டு நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்க நிறைய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

நுகர்வோரின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு அம்சங்களை பொதுமக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். பொதுமக்களுக்கு அவர்கள் வாங்கும் பொருட்களின் நியாயமான விலை, தரம் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் உரிமை உண்டு.

குறிப்பாக, நியாயமற்ற வர்த்தகத்தால் சுரண்டப்படுவதற்கு எதிரான உரிமை நுகர்வோருக்கு இருக்கிறது. நுகர்வோர் வாங்கும் பொருட்கள் மற்றும் அதன் சேவைகளில் ஆரோக்கியம், பாதுகாப்பு பெறுவதற்கான உரிமை உள்ளது.வாங்கும் பொருட்களின் தரம், செயல் திறன் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் உரிமை நுகர்வோருக்கு உள்ளது. மேலும் குறிப்பாக சுதந்திரமாக தாங்கள் வாங்க வேண்டிய பொருட்களை தேர்வு செய்யும் உரிமையும், வாங்கிய பொருட்களைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளும் உரிமையும், அபாயகரமான பொருட்களில் இருந்து பாதுகாக்கப்படுகிற உரிமையும், நுகர்வோர் நலன்கள் தொடர்பான செயல்முறைகளை அறிந்து கொள்ளும் உரிமையும் பொதுமக்களுக்கு இருக்கிறது.

நுகர்வோர் உரிமைகள் மீறப்படுகிற நேரத்தில் தீர்வு காண்பதற்காக நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகி பரிகாரம் பெற்றுக் கொள்கிற உரிமைகளும் உண்டு என்பதை சட்டம் படிக்கும் மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக இத்தகைய கருத்தரங்குகள் நடைபெறுகிறது.இத்தகைய கருத்தரங்குகள் நடைபெறுவது உங்களுக்கு மிக சிறந்த வாய்ப்பாகும். அவற்றில் பார்வையாளர்களாக மட்டுமல்லாமல் பங்கேற்பாளர்களாகவும் சட்ட மாணவர்கள் இருக்க வேண்டும். பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு உள்ள சட்டக்கல்வியில் சிறந்து விளங்குவதற்கு பல்துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வதும், தொடர்ந்து புதிய புத்தகங்களைப் படிப்பதும், தைரியமாக சபைகளில் பேசக்கூடிய ஆற்றலை வளர்த்துக் கொள்வதும் அவசியமாகும்.

மேலும், மாறி வருகிற சூழலுக்கு ஏற்ப டிஜிட்டல் தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ள வேண்டும். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லக்கூடிய செயற்கை நுண்ணறிவு துறையில் சட்டம் படிப்பவர்களும், வழக்கறிஞர்களும் ஆழமான அறிவு பெற வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் வழக்கறிஞர் தொழிலில் வெற்றி பெற முடியும்.

வருங்காலத்தில் மற்ற தொழில்களைப்போல் வழக்கறிஞர்களும் வெற்றி பெற வேண்டுமென்றால் மாறி வருகிற சூழலுக்கு ஏற்ப டிஜிட்டல் தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். என்று பேசினார். விழாவில் சத்தியபாமா சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சத்தியபாமா சட்டக் கல்லூரியின் உதவி பேராசிரியர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.

இதையும் படிங்க.!