வளசரவாக்கத்தில் திமுக கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக வட்ட செயலாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உடன் பிறக்குக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் தொடரும் திமுக உட்கட்சி பூசலால் நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். வட்ட செயலாளர் சத்தியமூர்த்தி வார்டு கவுன்சிலர் பெண் ஒருவரை ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எம்.பி. டி.ஆர்.பாலுவையும் வட்ட செயலாளர் சத்தியமூர்த்தி கடுமையாக விமர்சிந்ந்தாக கூறப்படுகிறது.
152 வது திமுக வட்ட செயலாளர் சத்தியமூர்த்தி
சென்னை வளசரவாக்கம், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பாரதி இவர் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11 வது மண்டலம், 152 வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஆரம்ப பள்ளியில் உடற்பயிற்சி கூடம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 152 வது திமுக வட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தன்னுடைய அனுமதி இல்லாமல் உடற்பயிற்சி கூடத்தை யார் கட்டியது என்று கேட்டு கவுன்சிலர் பாரதியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக வட்ட செயலாளர் சத்தியமூர்த்தியும் திமுக கவுன்சிலர் பாரதியும் சண்டை போடும் காட்சி.
இந்த நிலையில் வட்ட செயலாளர் சத்தியமூர்த்தியும் வார்டு கவுன்சிலர் பாரதியும் ஒருவரை ஒருவர் மாறி மாறி ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்யக்கூடிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தொடர்ந்து வளசரவாக்கம், ராமாபுரம் பகுதியில் திமுக நிர்வாகிகள் இடையே ஏற்படும் உட்கட்சி பூசலால் திமுக நிர்வாகிகள் தினம் தோறும் புலம்பி வருகின்றனர்.
திமுக வட்ட செயலாளர் சத்தியமூர்த்தியும் திமுக கவுன்சிலர் பாரதியும் சண்டை போடும் காட்சி.
திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கு பிரிப்பதிலும் உள்ளாட்சி பணிகள் செய்வதில் வழங்கப்படுகின்ற கமிஷன்களில் ஏற்படுகிற மோதல்கள் அதிகமாகி வருகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு மதுரவாயில் தொகுதி திமுக எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி ஆதவாளர்களான செல்வகுமார் அணியினருக்கும் 153வது மாநகர மாமன்ற உறுப்பினர் சாந்தி அவரது கணவர் ராமலிங்கத்திற்கும் செல்வக்குமார் அணியினருக்கும் கடும் அடிதடி சண்டை ஏற்பட்டது.
திமுக கவுன்சிலர் சாந்தியின் கணவர் ராமலிங்கம்.
இதில் ராமலிங்கத்தை செல்வகுமார் தரப்பினர் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படு காயமடைந்தார் ராமலிங்கம் கொடுத்த புகார் மீது போலிசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது. இதற்கான காரணம் குறித்து விசாரித்த போது 153 வது வட்டத்தில் நடக்கின்ற எல்லா பணிகளுக்கும் முறையான கமிஷன் தரவில்லை என்றால் வேலை செய்யக்கூடாது என்று ராமலிங்கம் மிரட்டி கமிஷன் கேட்டதாகவும் அது தவிர்த்து அந்தப் பகுதியில் கட்டப்படுகின்ற புதிய வீடுகளுக்கு கமிஷன் தர வேண்டும் என்று வீட்டின் உரிமையாளர்களை இராமலிங்கம் மிரட்டி லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
ராமலிங்கத்தை அடிக்கும் காட்சி
இது தொடர்பாக பல புகார்களை மாவட்ட செயலாளரான அமைச்சரும் மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியத்திற்கும் திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கும் பல புகார்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாமன்ற உறுப்பினர் சாந்தியின் அறையில் அவரது கணவர் ராமலிங்கம் உட்கார்ந்து கொண்டு அரசு பணிகளை கவனித்ததால் ஏற்பட்ட மோதல் காரணமாக அடிதடி நடந்ததாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ராமலிங்கம் மிகப்பெரிய வசதி படைத்தவராக இருந்து வருகிறார்.
திமுக கவுன்சிலர் பாரதி
அது தவிர அவர் சொந்தமாக சில தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இருப்பினும் கூட மக்கள் பணி செய்யாமல் மக்களுக்கு எதிராகவும் புதிதாக வீடு வாங்குவோர் வீடு கட்டுவோர் அந்தப் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் லஞ்சம் கேட்டு மிரட்டி மிரட்டி வருவதால் அந்த பகுதியில் திமுகவினருடைய பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார் ராமலிங்கம்.
இதுபோன்று சென்னை மாநகர் முழுவதும் இதே நிலை நீடித்து வருகிறது. அது தவிர்த்து சென்னை ஒட்டி உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலும் திமுகவின் அமைச்சர்களுக்கு எதிராகவும் திமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு எதிராகவும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.