chennireporters.com

மனித சமூகத்திற்கு வாழ்க்கையையே அர்ப்பணித்த டாக்டர்கள்.

Dr sarala gundur.

தோழர் சாரோன் பென்னி பதிவிலிருந்து..தோழர்களே… நேற்றய நாளில் அந்தத் தேடலை ஆந்திர மாநிலம் குண்டூரில் கண்டடைந்தேன்…

சி.எம்.சி.மருத்துவ மனை.

டாக்டர் சரளா, சி எம் சி மருத்துவ கல்லூரியில் 1943-46 -ல் MBBS பயின்றவர்.இந்தியாவில் பெண்களுக்காக டாக்டர் ஐடா ஸ்கடரால் தொடங்கப்பட்ட முதல் மருத்துவ கல்லூரியின் முன்னாள் மாணவி.

எத்தனை அரிய நினைவுகள்…முழுக்க முழுக்க அமெரிக்க மருத்துவ ஆசிரியர்களைக் கொண்ட கல்லூரி அனுபவங்கள்…1000 பேர்கள் பங்கேற்ற நேர்முகத் தேர்வில் (27/1000) தேர்வான 27 -ல் முதலாக வந்தவர்.

Dr miss Dora mumistra

பாகிஸ்தான், இலங்கை, பர்மா, நேபாளம் என பல்வேறு நாடுகளிலிருந்து மாணவிகள் தேர்வில் பங்கேற்றது…காந்தி சி எம் சி வந்தப்போது காந்தியை நேரில் சந்தித்த அனுபவம்..

மூன்றாமாண்டு படிக்கையில் எடுத்த நான்கு தீர்மானங்களை இந்த நாள் வரை கடைபிடித்து வருவது…36 ஆண்டுகள் தொடர்ந்து குண்டூர் மருத்துமனையில் பணியாற்றிய அனுபவங்கள்…

டாக்டர் ஐடா உடனான அனுபவங்களும் வழிக்காட்டலும்… Roadside Dispensaries, railwaystation dispensaries என 1950- களில் தொடர்ந்து செய்த மகத்தான பணிகள்.. இப்படி எத்தனையோ…

மிக முக்கியமாக 1897-ல் டாக்டர் ஐடாவிற்கு முன்னோடியாக Dr. Anna sarah kugler – எனும் மிஷினரியால் குண்டூரில் பெண்களுக்கா தொடங்கப்பட்ட மருத்துவமனையில் தான் டாக்டர் சரளா 1953 முதல் 36 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

Dr. Kugler, இந்தியாவிற்கு வந்த முதல் பெண் மருத்துவ மிஷினரி, Dr. Ida scudder உடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த மருத்துவ பெண்மணி..1930-ல் தனது 74 வது வயதில் மரண படுக்கையில் இருக்கையில் Dr. Ida scudder – க்கு எழுதிய கடிதத்தில்..

” சுகம் பெற்று எழுந்தால் இன்னும் நீண்ட காலம் பணியாற்றுவேன்.என் கவலை ஒன்று தான்: இந்தியாவுக்காக ஐம்பது ஆண்டுக்காலம் சேவை செய்வேன் என்று நினைத்தேன், 47 ஆண்டுகள் மட்டுமே சேவை செய்ய முடிந்தது..”

Dr. Kugler -ன் கல்லறை குண்டூரில் தான் உள்ளது.

Dr. Kugler
Dr. Ida scudder
Dr. Sarala
Dr. Alice braiyer, Ambur
இவர்கள் யாரும் திருமண வாழ்வைத் துறந்தவர்கள்.வாழ்நாளெல்லாம் உழைத்து மக்களின் உயிரைக் காப்பாற்றியவர்கள்.. இவர்களின் வரலாறெல்லாம் மறைக்கப்பட்டதா? மறுதலிக்கப்பட்டார்களா??

விரைவில் … இவர்களின் வரலாறுகளை முன்னெடுப்போம்…
அடுத்த பயணத்தை தொடங்கிவிட்டேன்.

இதையும் படிங்க.!