chennireporters.com

#fake document போலி ஆவணம் மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை ஏமாற்றிய தம்பி. அண்ணனுக்கு அல்வா கொடுத்த போலீஸ்.

தனது தந்தையின் நிலத்திற்கு போலிப்பட்டார் தயார் செய்து நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்படும் தம்பி மற்றும் தனது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் அருகே உள்ள சிறுகடல் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கரிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது என் தந்தை ராமச்சந்திர ராஜா மற்றும் தேவராஜா ஆகியோர் பெயரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சிறுகடல் கிராமத்தில் சர்வே எண் 51/1B ல் 97.5 சென்ட் நிலம் அனுபவத்தில் இருந்து வந்தது என் தந்தை தனக்கு சேர வேண்டிய 48.75 சென்ட் நிலத்தில் எனக்கும் என் தங்கை பானுமதிக்கும் கடந்த 2017ம் ஆண்டு செட்டில்மெண்ட் மூலம்  சொத்தை பிரித்து கொடுத்தார்.

 

அப்போது என் தம்பி விஜயகுமார் என்பவர் என் தந்தைக்குத் துணையாக உடனிருந்து உதவி வந்தார்.  மேற்படி சொத்து எங்கள் தாத்தா பெயரில் உள்ளதாக சொல்லி எனது உறவினர்களான  ஹரிபாபு, விஜயகுமாரி, சத்திய நாராயணன்,  ஜோதிபாய், பாஸ்கர், சீனிவாசன் ஆகியோர் திருவள்ளூர் மாவட்டத்தில் நீதிமன்றத்தில் 2019ம் ஆண்டு வழக்கு   தொடுத்தனர். அவர்கள் ஏற்கனவே போலியாக தயார் செய்து வைத்திருந்த  பொது அதிகார பத்திரம்  பற்றி எனக்கு  தெரியாத நிலையில் வழக்கில் ஆஜராகி நடத்தி வந்த நிலையில் அரிபாபு  இந்த வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை  நான் வழக்கு ஏதும் தொடுக்கவில்லை என்று  நீதிமன்றத்தில்  கூறினார் இந்நிலையில்  வழக்கு தொடுத்தவர்கள் யாரும்  நீதிமன்றத்தில் ஆஜராகத நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.  ஆனால் மேற்படி நபர்கள் யாரும் நீதிமன்றத்திற்கு வராத காரணத்தினால் மேற்படி பாகம் கேட்டு அவர்கள் கொடுத்த வழக்கு 13/7/2022 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணம்.

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் என் பெயரில் பட்டா பெற முயற்சித்த போது வெவ்வேறு வழிகளில் எனக்கு சொந்தமான இடத்திற்கு போலியான ஆவணம் தயார் செய்துள்ளனர். அதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன் இது குறித்து காவல்துறையில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தேன். செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது.

விஏஓ கல்யாண சுந்தரி.

அதில் மேற்படி நபர்கள் அசல் ஆவணங்களை எடுத்து வருவதாக சொல்லிவிட்டு சென்றவர்கள் இதனால் வரை வரவில்லை. காவல் ஆய்வாளரிடம் விசாரித்த போது இது மோசடி வழக்கு மற்றும் நில மோசடி பிரிவு போலீசார் தான் விசாரிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதன்படி செவ்வாப்பேட்டை விஏஓ கல்யாண சுந்தரி என்பவர் என்னுடைய தம்பி விஜயகுமார் மற்றும் என்னுடைய அத்தைக்கு உறவினர் அவர் எல்லா வகைகளிலும் அவர்களுக்கு உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் என்னுடைய அத்தை மகள் ஜோதி பாய்க்கு சொந்தமான  குட்டி யானை லாரியை விஏஓ கல்யாண சுந்தரியின் கணவருக்கு இலவசமாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஏஓ கல்யாண சுந்தரியின் கணவர் கருணாநிதி அவரது பிள்ளைகள் பேபி லதா, ரக்ஷனா ஆகிய மூவரின் பெயரிலும் பாலகிருஷ்ணனுக்கு சொந்தமான இடத்திலிருந்து 12 சென்ட் நிலத்தை மோசடி ஆவணங்கள் மூலம் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றியுள்ளார் விஏஓ கல்யாண சுந்தரி.

 

விஏஓ கல்யாண சுந்தரி.

எனவே மாநகர காவல் ஆணையர் மேற்படி மோசடி நபர்கள் மீது விசாரணை நடத்தி எனக்கு நீதி பெற்றுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து பலமுறை விசாரணைக்கு அழைத்த போலீசார் மோசடி நபர்கள் விஜயகுமார், ஜோதி ஆகியோர் இதுவரை போலீசாரிடம் நேரில் ஆஜராகவும் இல்லை அவர்களிடம் உள்ள அசல் ஆவணங்களை போலீசாரிடம் காட்டவும் இல்லை.  என்னை விசாரணைக்கு இழைத்த  அழைத்த போலீசார் அவர்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த ஒரு பேப்பரில் கையொப்பமிட சொல்லி வற்புறுத்தி கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர் அதில் சிவில் வழக்கு தொடர்பாக நான் நீதிமன்றத்திற்கு சென்று நிவாரணம் தேடிக்கொள்ள விரும்புவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பாலகிருஷ்ணன் நமது அலுவலகத்திற்கு நேரில் வந்து நடந்த நிகழ்வை தெளிவாக நம்மிடம் தெரிவித்தார். அவர் நம்மிடம் கூறியதிலிருந்து.

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாபேட்டை அருகே உள்ளது சிறு கடல் கிராமம் இந்த கிராமத்தை சேர்ந்தவர் பக்தவச்சலம் இவருக்கு 9 பிள்ளைகள் கோவிந்தம்மாள், கமலம்மாள், ஸ்ரீராமுலு, தேவராஜ் ,ஆண்டாள் அம்மாள் , ஜெயராமன், ராமச்சந்திரன் நாராயணசாமி, பத்மநாபன்.

பக்தவச்சலத்தின் ஏழாவது மகன் ராமச்சந்திரன் இவர் தன்னுடைய தம்பி நாராயணசாமிக்கு பிறந்த பாலகிருஷ்ணனை தத்தெடுத்துக் கொண்டார். பாலகிருஷ்ணனின் தன்னுடைய சொந்த தம்பி விஜயகுமாரும் தனது உறவினர்களும் தனக்கு எதிராகவே தற்போது செயல்பட்டு வருகின்றனர்.

தனது தாத்தா பக்தவச்சலத்திற்கு சொந்தமாக 17 ஏக்கர் நிலம் இருந்தது இந்த 17 ஏக்கர் நிலத்தில் தனது சகோதரிகளுக்கு சொத்து தராமல் ஆறு மகன்கள் சமமாக பிரித்துக் கொண்டனர். இந்த நிலையில் சகோதரிகள் நீதிமன்றத்திற்கு சென்று 7 ஏக்கர் நிலத்தை தங்களது பங்காக பெற்றுக் கொண்டனர். மீதமுள்ள 10 ஏக்கர் நிலத்தில் நாராயணசாமியும் பத்மநாபனும் சேர்ந்து1994ம் ஆண்டு ஐந்தரை 5. 1/2 ஏக்கர் நிலத்தை விற்று விடுகின்றனர்.

மனுதாரர் பாலகிருஷ்ணன்.

இந்நிலையில் ஸ்ரீராமுலு , ஜெயராம் ஆகிய இருவரும் தனித்தனியாக இரண்டு ஏக்கர் நிலத்தை விற்று விடுகின்றனர். மேலும் தேவராஜன் ஒரு ஏக்கர் நிலத்தை தனியாக விற்பனை செய்து விடுகிறார். பக்தவக்தலத்தின் சொத்தை பிரித்த பாகத்தில் மீதி உள்ள 1.1/2 ஏக்கர் நிலம் ராமச்சந்திரனுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாப்பேட்டையை சேர்ந்த தாஸ் என்பவரிடம் 51/ 1b ல் 97.5 சென்ட் நிலத்தை 1969 ஆம் ஆண்டு தேவராஜியும் ராமச்சந்திரனும் தன்னுடைய உழைப்பில் சம்பாதித்து இந்த இடத்தை வாங்கினார்கள்.

நாராயணசாமியின் மகன் விஜயகுமார் ஆண்டாள் அம்மா மகள் ஜோதி பாய் இந்த இருவரும் சேர்ந்து ராமச்சந்திரனுக்கு பாகத்தில் பிரிக்கப்பட்ட சர்வே எண் 51/3 1.32 அதாவது ஒரு ஏக்கர் 32 சென்ட் இடத்தை போலியான ஆவணம் தயார் செய்து 51/ 1B என்று ஆவணத்தை அதிகாரிகள் துணையுடன் மாற்றி தனது தாத்தா பக்தவச்சலத்தில் சொத்துக்களுடன் தான் தனியாக சம்பாதித்த 97.5 சென்ட் நிலத்தை 1.32 சென்ட் என்று மாற்றி விடுகின்றனர்.

பக்தவச்சலத்தின் பட்டா எண் 99 . ராமச்சந்திரன் மிக்க சொந்தமான பட்டா எண் 155. முன்னாள் தாசில்தார் நாராயணன் லஞ்சம் வாங்கிக் கொண்டு போலியாக ஒரு பட்டா புத்தகத்தை மேற்படி நபர்களுக்கு வழங்குகிறார். அந்தப் பட்டா புத்தகத்தில் 51/ 3 என்கிற ஆவணத்தில் 51/1B என்று புதிதாக போலியாக ஒரு ஆவணத்தை தயார் செய்துள்ளனர்.

இந்த நிலையில் செவ்வாப்பேட்டை மற்றும் சிறுகடல் கிராம வருவாய் நிர்வாக அலுவலரான கல்யாண சுந்தரி,  விஜயகுமார் மற்றும் ஜோதி அவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு ராமச்சந்திரன் சுயமாக சம்பாதித்த 97.5 சென்ட்  இடம் அதாவது 51/1b இடத்தை தனது தாத்தா பக்தவச்சலம் சம்பாதித்ததாக புதிதாக ஒரு போலியான ஆவணத்தை நிர்வாக அலுவலர் கல்யாண சுந்தரி மேற்படி ஃபிராடுகளுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்.

இதுகுறித்து வருவாய்துறையில் புகார் அளித்தபோது விசாரணை என்ற பெயரில் ஒன்றரை ஆண்டுகள் கழித்து முன்னாள் அதிகாரிகள் செய்த தவறுக்கு நாங்கள் என்ன செய்யமுடியும் இது குறித்து எந்தசந்தேகம் இருந்தாலும் பட்டாவை மாற்றிக்கொடுத்த vao வை கேளுங்கள் என்று சொல்லிவிட்டார். 

 

பின்னர் ஆவடி நில அபகரிப்பு துறை ஆணையாளர் அவர்களிடம் புகார் செய்த போது எட்டு மாதங்களுக்கு பிறகு காவல் ஆய்வாளர் மோசடி நபர்களிடம் எந்த ஆவணமும் பெற்றுக்கொள்ளாமல் சர்வே எண் 51/B என்கிற நிலத்தை 1987ல் உன் அப்பா விற்றுவிட்டார் எனவே நீதிமன்றம் சென்று நியாயத்தை தேடிக்கொள் என்று அனுப்பிவைத்தார்.

ஃபிராடு  செய்த நபர்களிடம் சி.சி.பி. காவல் பிரிவு போலிசாருக்கு கை மாறிய கருப்பு பணம் எவ்வளவு என்பதை பாலகிருஷ்ண்ணன் வரக்கை விசாரித்த  இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டருக்கே வெளிச்சம். இந்நிலையில் ஆவடி காவல்  ஆணையர் அலுவலகத்தில் உள்ள சி.சி.பி.டிசி பெருமாள் பாலகிருஷ்ணனை நேரில் அழைத்து விசாரணை நடத்திய போது நடந்த கமாடி இருக்கே வடிவேலு காமடியே தோற்றுவிடும் அளவிற்கு இருந்தது. பாதிக்கப்பட்டவர்களை ஏன் சும்மா அலைய வைக்கிறீங்க எவுவளவு திட்டினாலும் நீங்கள் திருந்த மாட்டீர்கள் என்று கோபம் கொப்பளிக்க பேசியது பெரிய காமடியாக இருந்தது.

Avadi ccb DC Perumal

அதாவது  சம்பந்தப்பட்ட பாலகிருஷ்ணனை ஆழைத்த பெண் இன்ஸ்பெக்டர் நான் சொல்கிற மாதிரி அதாவது ஏற்கனவே அவர்கள் எழுதி வாங்கி வைத்த பேப்பரில் குறிப்பிட பட்டுள்ள மாதிரி சொல்லவேண்டும் என்று மிரட்டும் தொணியில் சொன்னார். டி.சி. பெருமாள்  எங்களால் ஒன்றும் செய்ய முடியாது நீங்கள் கோர்ட்டில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று அவரை அனுப்பி வைத்தனர்.  பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணனுக்கு எப்போது தான் நீதி கிடைக்கும் என்று தெரியவில்லை. மேலும் போலிசாருக்கு பணம் கொடுக்கும் அளவிற்கு பாலகிருஷ்ணனிடம் பணமும் இல்லை.

பணம் கொடுப்பவர்களுக்கு ஒரு நீதியும் இல்லாதவர்களுக்கு ஒரு நீதியும் போலீசார் வழங்குவார்கள் என்பது பாலகிருஷ்ணன் கொடுத்த புகார் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இதையும் படிங்க.!