Chennai Reporters

தமிழக முதல்வரின் அதிரடி ஆவேசப்பேச்சு அஞ்சி நடுங்கும் எடப்பாடி.

பயம் என்கிற வார்த்தையை ஒருபோதும் கேள்விப்படாத திமுகவை பார்த்து எந்தவித தகுதியும் இல்லாமல் காலை பிடித்து பதவி பெறுவதும் பதவியை பெற்ற பின்னர் காலை வாரிவிடும் எடப்பாடியின் இயல்பு குணம்.

அரசியல் சதுரங்க ஆடு புலி ஆட்டத்தில் புலியின் வேட்டைக்கு இறையாகும் எடப்பாடி என்ற ஆடு எதைப் பார்த்தாலும் பயப்படுவது மிசா சட்டத்தையே பார்த்த ஸ்டாலினை உங்களால் மிரட்ட முடியாது.

எந்த நேரத்திலும் நாங்கள் யாரிடமும் பதவி பெறுவதற்கு கால் பிடித்ததும் இல்லை.ஆள் பிடித்ததும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சி நகர்ப்புற தேர்தல் தொடர்பான பரப்புரையில் ஆவேசம் பொங்க பேசியிருக்கிறார்.

இந்த பேச்சை கண்டு எடப்பாடி அஞ்சி நடுங்குவதாகவும் நம்மை இந்த அரசு எப்படியும் பழி தீர்த்து விடும் என்று பயப்படுவதாக அதிமுக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முதலமைச்சர் எப்போதும் இப்படி ஆவேசம் பொங்க பேசியதே இல்லை முதல்வரின் கோபத்திற்கு எடப்பாடி ஆகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!