chennireporters.com

ராஜஸ்தானில் கான்ஸ்டபிளாக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான கூலித்தொழிலாளி..

ராஜஸ்தான் மாநிலத்தில் கான்ஸ்டபிளாக இருந்து ஐஏஎஸ் ஆன கூலி தொழிலாளி பற்றிய செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் பாபி என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர் ராம் பஜன் கும்ஹரா தன் தந்தையின் இறப்புக்கு பிறகு தனது தாயுடன் கூலித் தொழிலாளியாக பல இடங்களில் வேலை செய்து கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தார். தனது குடும்பத்தின் வறுமையை கருதிய ராம் பஜன் ஏழு ஆண்டுகள் போராடி எட்டாவது முறையாக யுபிஎஸ்சி தேர்வில் ஐஏஎஸ் ஆகி மகுடம் சூடி உள்ளார் .

தனது லட்சியத்தை  அடைய  7 முறை யுபிஎஸ்சி தேர்வை எழுதியுள்ளார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. எட்டாவது முறையாக  கடைசியாக  முயற்சி  செய்து எட்டாத உயரத்தில் இருந்த ஐஏஏஸ் என்கிற  தனது லட்சியத்தை அடைந்து விட்டார் ராம் பஜன் கும்ஹரா.

ராம் பஜன் குமார் ஐஏஎஸ் தேர்வு என்பது பல லட்சம் மாணவர்களின் கனவு. படித்து முடித்த உடன் என்ன ஆவாய் என்று கேட்டால் , பலரும் சொல்லும் வார்த்தை, ஐஏஎஸ்.. ஐபிஎஸ், ஐஎப்எஸ், இந்த மூன்றுமே ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரேங்க் அடிப்படையில் வழங்கப்படும் பொறுப்பு ஆகும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணைத்தின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெல்பவர்கள் ஐஏஏஸ் ஆக முடியும்.  கடுமையான உழைப்பும், விடாமுயற்சியும் கொண்டு UPSC நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற ராம் பஜன் பற்றி இப்போது பார்ப்போம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாபி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த ராம் பஜன் கும்ஹாரா. இவரது தந்தை கொரோனா சமயத்தில் இறந்துவிட்டார். தற்போது தனது தாயுடன் வசித்து வருகிறார். இவரது வீடு அவ்வளவு நல்ல வீடு இல்லை. மிகமோசமான நிலையில் இருந்தது. மிகவும் வறுமையான குடும்பம். ராம் பஜனுக்கோ படிக்க வேண்டும் என்று வெறி இருந்தது. வறுமையை விரட்ட தொடர்ந்து படித்தார். படித்துக் கொண்டே குடும்ப சூழ்நிலை காரணமாக தனது தாயுடன் சேர்ந்து தினக் கூலியாக வேலை செய்து வந்தார். பல மணி நேரம் கற்களை உடைப்பதும், உடைத்த கற்களை அவரது தாயார் சுமந்து செல்வதும் நடந்து வந்தது.

அப்படி வேலை செய்தாலும் தினக்கூலியாக 10 ரூபாய் தான் கிடைக்கும். ஒரு வேளை சாப்பாடு கூட நன்றாக சரியாக சாப்பிட முடியாத நிலை இருந்திருக்கிறது. இப்படி பல சவாலான சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும் வெற்றியை நோக்கி பயணத்தை தொடங்கினார், அவரது இலக்காக இமயம் இருந்தது. ஆம்..ஐஏஎஸ் என்ற இலக்கை முன்வைத்து படித்தார். யுபிஎஸ்சி தேர்வு எழுதினார். ஒருமுறைஅல்ல. இருமுறை அல்ல.. 7 முறை எழுதினார். ஏழு முறையும் தோற்றார். ஆனாலும் விடாமல் எழுதி எட்டாவது முயற்சியில் நாடே பாராட்டும் வண்ணம் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றுள்ளார். யுபிஎஸ்சி தேர்வில் ராம் பஜன் 667வது ரேங்க் உடன் வெற்றி பெற்று ஐஏஏஸ் ஆக மாறி உள்ளார். தினக்கூலியாக பயணித்து வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராம் பஜனின் இந்த பயணம் பலருக்கும் வழிகாட்டியாக மாறி உள்ளது.

இதையும் படிங்க.!