Chennai Reporters

காவல்நிலையத்தை ஆய்வு செய்த முதலமைச்சர்.

முதலமைச்சர் மு. க ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் தனது ஆய்வு பணியை முடித்துக்
கொண்டு தர்மபுரி மாவட்டத்திற்கு செல்லும் வழியில் திடீரென்று முதலமைச்சரின் வாகனத்தை நிறுத்தச் சொல்லி வழியில் அமைந்துள்ள B2 அதியமான் கோட்டை காவல் நிலையத்தை ஆய்வு செய்தார்.

அங்கு பணியிலிருந்த காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களிடம் வழக்குகளின் பதிவேடுகள் பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

பொதுமக்களின் புகார்கள் மீது விரைவாகவும் நியாயமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!