chennireporters.com

ஊழலில் சிக்கி மந்திரியிடம் மோதிய பெண் போலீஸ் டி.ஐ.ஜி. பதவி பறிப்பு.

திமுக மூத்த அமைச்சருடன் மோதி லஞ்ச ஊழலில் சிக்கிய பெண் போலீஸ் டி.ஐ.ஜி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சம்பவம் ஐபிஎஸ் அதிகாரிகள் வட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார் ஆனி விஜயா. அவர் வேலூருக்கு வந்தவுடன் அலுவலகத்தை மாற்றி அமைத்து விட்டாராம்.  தான் ஓய்வெடுக்க தனது விருப்பம் போல அலுவலகத்தில் மாற்றம் செய்து கொண்டார்.

அது தவிர ஆனிவிஜயா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை உளவுத்துறை அதிகாரிகள் முதல்வரின் கவனத்திற்கு அனுப்பினர்

. அதன் அடிப்படையில் திடீரென  அரசு அவரை பதவியில் இருந்து நீக்கி காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பியுள்ளது.

காஞ்சிபுரம் டி.ஐ. ஜி சத்திய பிரியாவை கூடுதல் பொறுப்பை கவனிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த செய்தி வெளியானதும் ஆனிவிஜயா  பற்றி நாடு முழுவதிலிருந்தும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டி.ஐ.ஜி. சத்திய பிரியா

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தேவராஜ் இவர் மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.   அவரது உறவுமுறை பெண் ஒருவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

அவர் டி.ஐ.ஜியை சந்தித்து தனக்கு உடல் நலம் சரியில்லை பணி மாறுதல் வேண்டி மனு அளித்துள்ளார். ஆனால் அதை குப்பையில் வீசிய ஆனிவிஜயா எந்தவித நடவடிக்கை எடுக்காமல் காலம் தள்ளியுள்ளார்.  இது தொடர்பாக அந்த பெண் இன்ஸ்பெக்டர் தனது உறவுக்காரான திமுக எம்.எல்.ஏவிடம் முறையிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ  ஆனிவிஜயாவிடம் செல்போனில் பேசி உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் அவர் பேச்சுக்கே எந்தவித மதிப்பும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.  இதே போல அரக்கோணம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சேதுபதி.

அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளது. டீ ,காபி, குளிர்பானம், காலை டிபன், மதியம் சாப்பாடு என எதையுமே சொந்த காசில் சாப்பிட மாட்டாராம் இந்த இன்ஸ்பெக்டர் சேதுபதி.  இந்த சேதுபதியை தென் மாவட்டத்திற்கு மாற்ற உத்தரவிட்டு டி.ஐ.ஜி உத்தரவு போட்டுள்ளார்.

உடனடியாக டி.ஐ.ஜி ஆனிவிஜயாவை பார்த்து பத்துலட்சம் ரூபாய் வரை மேடத்திற்கு கட்டிங் கொடுத்து இன்ஸ்பெக்டர் சேதுபதி தனது பதவியை தக்க வைத்து கொண்டதாக சொல்லுகிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள்.

பின்னர் அவரை மாற்றம் செய்து போட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டு ஆற்காடு காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.   இதை கேள்விப்பட்ட அங்கு பணியாற்றும் ஆற்காடு இன்ஸ்பெக்டர் காண்டீபன் அமைச்சரிடம் போய் முறையிட்டாராம்.

 

ஆனிவிஜியா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதை பட்டியல் போட்டு சொன்னாராம் இன்ஸ்பெக்டர்.  காண்டீபன் இந்த நிலையில் சமீபத்தில் நடந்த போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், ஒரு சில டி.எஸ்.பிகளை ஒருமையில் பேசி அவமானப்படுத்தினாராம்.   இதையெல்லாம் உளவுத்துறையினர் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தகவல் சொன்னார்களாம்.

வேலூர் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் இருக்கும் பெண் இன்ஸ்பெக்டர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளவராம்.  அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் தூள் வரை ஊழல் பணத்தில் தான் வீட்டுக்கு வாங்கி செல்வாராம் அந்த பெண் இன்ஸ்பெக்டர்.

அவர் குடியாத்தம் காவல் நிலையத்துக்கு பணி மாறுதல் கேட்டு விருப்பம் தெரிவித்து மனு அளித்தாராம்.  ஆனால் அவரிடம் கவர் வாங்கிய டி.ஐ.ஜி அந்த  பெண் இன்ஸ்பெக்டருக்கு  ட்ரான்ஸ்பர்  போடாமல் நாமத்தை போட்டாராம்.

குடியாத்தம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் இன்ஸ்பெக்டர்  ஒருவர் பேரணாம்பட்டு செல்ல விருப்பம் தெரிவித்து ஒரு ஐந்து ஒற்றை இலக்க லட்சத்தை மேடத்தின் குடும்ப செலவிற்கு கொடுத்தாராம்.

        ஆனி விஜயா

ஆனால் ட்ரான்ஸ்பர் போடுவதற்கு முன்பு மேடத்தை தொங்கலில் விட்டுள்ளது அரசு என வருத்தப்பட்டு கண்ணீர் வடிக்கிறாராம் அந்த பெண் இன்ஸ்பெக்டர். டி.ஐ.ஜி.ஆனி விஜயா இரண்டு இளைஞர்களின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டெல்லி ஐ.பி.யில் வேலை பார்ப்பதாக பொய் சொல்லி ஆனி விஜயாவுடன் நட்பு பாராட்டி வரும்  இளைஞர் வேலூரில் வந்து ஆனி விஜயா பெயர் சொல்லி கல்லாக்கட்டும் திருச்சி இளைஞரும் தான் பெரிய கவிஞர் என்று பொய் சொல்லி ஆனிவிஜியாவுடன்  எடுத்து  இருக்கும் சில புகைப்படங்களை காட்டி பணம் சம்பாதிக்கும் இந்த இரண்டு பேர் சொல்வதைத்தான் ஆனிவிஜியா கேட்கிறாராம்.

யார் அந்த இரண்டு இளைஞர்கள் அவர்களுக்கும் ஆனிவிஜயாவுக்கும் உள்ள தொடர்பு பற்றி உளவுத்துறை அதிகாரிகள் பல அதிர்ச்சி தகவல்களை தமிழக முதல்வருக்கு நோட்டு போட்டு அனுப்பி இருக்கிறார்களாம் .

ஏற்கனவே 1999ம் ஆண்டு திருவள்ளூரில் பயிற்சி டி.எஸ்.பியாக வேலை பார்த்த போது ஆனிவிஜியா மீது பல்வே குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டது . அங்கு தனது தகுதிக்கு சம்பந்தம்  இல்லாத சில காவலர்களுடன் அவர் நட்பு பாராட்டியதால் அவர் குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாம். 

தமிழகத்தில் எந்த இடத்திற்கு பணியமர்த்தப் பட்டாலும் லஞ்சம் ,பணம், பணம் என்று கல்லா கட்டுவதிலேயே குறியாக இருப்பாராம் ஆனிவிஜயா.

ஆனிவிஜியா காக்கி சட்டை போட்ட ஒரு அவமானத்தின் சின்னம் என்கிறார்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

இதையும் படிங்க.!