Chennai Reporters

திருப்பதி கோயில் ஊழியர் வீட்டில் பத்து லட்சம் பணம் கண்டு பிடிப்பு.

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த முன்னாள் ஊழியர் வீட்டில் கட்டுகட்டாக பல லட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயார் செய்யும் பணியில் சீனிவாச்சாரி என்பவர் பணியாற்றி வந்தார்.இவருக்கு தேவஸ்தானம் சார்பில் திருப்பதி சேஷாசலம் நகரில் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது.

hundial
சீனிவாச்சாரி வீட்டில் பணம் எண்ணும் ஊழியர்கள்.

கடந்த ஆண்டு சீனிவாசாச்சாரி இறந்ததால் அந்த வீட்டை கையகப்படுத்தும் பணி நடைபெற்றது.இதற்காக தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து சென்று பார்த்தபோது அங்கிருந்த பெட்டியில் கட்டுகட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பணம் என்னும் இயந்திரம் கொண்டு வந்து அவற்றை எண்ணியபோது சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பது தெரியவந்தது.இந்த பணம் எப்படி வந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சீனிவாசாச்சாரி உடல்நலம் சரியில்லாமல் கடந்த ஆண்டு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!