chennireporters.com

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை . மீசையை முறுக்கினார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின் அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  இந்த தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் களத்தில் அனல் வீசுகிறது. இந்தியா முழுவதும்இந்ததீர்பைகாங்கிரஸ்கட்சியினர்கொண்டாடி வருகின்றனர்.திராவிடர் இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் தனது ட்விட்டர் பதிவில் நீதி வென்றது. நியாயத்திற்கு மகுடம் கிடைத்தது.  வயநாடு நாயகன் வரலாறு படைக்க வாசல் திறந்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். எம்பி கனிமொழி வாய்மையே வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அவர்கள் இது நரேந்திர மோடிக்கும் பாரதிய ஜனதா கூட்டணிக்கும் கிடைத்த பெரும் பின்னடைவாக பார்க்கிறேன்.இந்தியா கூட்டணிக்கு கிடைத்த முதல் வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

திமுகவின் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி இன்று மிகவும் ரசித்த அரசியல் புகைப்படம் என்று மோடியும் ராகுல் காந்தியும் நேருக்கு நேர் சந்திக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மதுரை எம்பி சு வெங்கடேசன் அமைதியாக இருங்கள் அமலாக்கத்துறை வீட்டுக்கு வரும் என்று நேற்று அமைச்சர் மீனாட்சி லேகி சொன்னபோதே தெரியும் இது எங்களுக்காக மட்டும் சொல்லப்பட்டதில்லை என்று இன்று வந்திருக்கும் தீர்ப்பு நேற்றைய குறளின் முதுகெலும்பை ஒழித்திருக்கிறது.  நீதி தரும் மகிழ்வை இந்தியா உணர்கிறது என்று கூறியுள்ளார்.

அதானி குறித்து எனது அடுத்த பேச்சுக்கு பிரதமர் பயந்ததால் தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன் என்று ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ராகுல் காந்தி தனது மீசையை முறுக்கும் படத்தை பதிவிட்டு காங்கிரஸ் மற்றும்  அதன் கூட்டணி கட்சியினர் வெளியிட்டு வருகின்றனர். அந்தப் படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க.!