chennireporters.com

#palani murugan பழனி கோவிலுக்கு வேறு மதத்தினர் செல்ல தடை . இந்துக்கள் யார் என்பதை நீதிபதி விளக்க வேண்டும் முன்னாள் நீதிபதி சந்துரு வலியுறுத்தல்.

பழனி கோவிலுக்கு வேறு மதத்தினர் செல்ல தடை விதித்து மதுரை உயர் நீதி மன்ற கிளை உத்தரவு கிறப்பித்துள்ளது. இந்துக்கள் யார் என்பதை நீதிபதி விளக்க வேண்டும்  என்று முன்னாள் நீதிபதி சந்துரு வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் நீதிபதி சந்துரு. 

பழனி முருகன் கோயிலுக்கு இந்துக்களை தவிர வேறு யாரும் செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ள நீதிபதி இந்துக்கள் யார் என்பதை விளக்கமாக தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு வலியுறுத்தியுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் ரவிக்குமார் எம்.பி., முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதில், முன்னாள் நீதிபதி சந்துரு கூறியதாவது: நாட்டில் படிப்பவர்களை பார்த்து அச்சப்படும் கூட்டம் இருக்கிறது. பள்ளிவாசலை இடித்து கோயில் கட்டுகிறார்கள்.நாட்டில் இன்றைக்கு ராமர் கோயில் கட்டியிருக்கிறார்கள். இதுதொடர்பான வழக்கு சொத்து என்ற அடிப்படையில் விசாரிக்கப்பட்டது. ஆனால் ஆவணம் இல்லாமல் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்பட்டது. மக்கள் அரசியல் சட்டத்தை படிக்க வேண்டும். ஜனநாயகம் இன்றைக்கு கடுமையான சூழலில் உள்ளது. நாட்டின் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும் சூழல் உள்ள நிலையில் அதுகுறித்து மக்கள் கவலைப்படுவதில்லை. பால ராமர் செய்தவராலேயே இனிமேல் அந்த சிலையை தொட முடியாது. அதற்கு காரணம் வருனாசிரமம்.சனாதனம் குறித்து பேசியதற்காக உதயநிதி ஸ்டாலினை தலையை சீவவேண்டும் என பேசினார்கள். இந்து தான் கோயிலுக்கு செல்ல முடியும் என்கிறார்கள். அப்படியென்றால் யார் இந்து?. படிப்பதன் மூலம் அறியாமையை மட்டுமல்ல மதத்தையும் விரட்ட முடியும். பழனி முருகன் கோயிலுக்குள் இந்துக்களை தவிர வேறு யாரும் செல்லக்கூடாது என்று நீதிபதி கூறியுள்ளார். அப்படியென்றால் இந்துக்கள் யார் என்று அந்த நீதிபதி விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பழனி முருகன் கோயிலுக்குள் இந்துகள் அல்லாதவர்கள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவிட கோரி வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

பழனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பழனி முருகன் கோயிலில் தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947 படி இந்து அல்லாத சமயத்தினர் கோயிலில் நுழைவதை தடுக்கின்றது. எனவே இந்து அல்லாதவர்கள் கோயிலுக்கு நுழைய தடை என்ற பதாகையை வைக்க கோரி இருந்தார்.

 

இந்த வழக்கில், இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மதக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

‘இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்பு பதாகையை கோயில் வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்றும் நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் கோயிலில் தரிசனம் செய்ய விரும்பினால், கோயிலில் இதற்காக பதிவேடு வைக்க வேண்டும். அதில் ‘இந்த சுவாமி மீது நம்பிக்கை வைத்து தரிசனம் செய்ய வருகிறேன்’ என உத்தரவாதம் கொடுத்த பிறகு கோயிலுக்கு அனுமதிக்கலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

https://youtu.be/v5kPXDO1oc8

இதையும் படிங்க.!