தனியார் கொரியர் தொழிலை ஊக்குவிக்கும் தபால் அலுவலக
மசோதா 2023
சிறப்பு கட்டுரை: நாள் : 22-12-2023
கே.முருகன் முன்னாள் தேசிய பொது செயலாளர் AIYF, CPI புதுச்சேரி.
மோடி தலைமையிலான ஒன்றிய BJP அரசு தபால் அலுவலகம் மசோதா 2023 ஐ கடந்த டிசம்பர் 04,2023 அன்று மாநிலங்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றியது. இது தபால் அலுவலக சட்டம் 1898 ஐ திரும்ப பெற்றுள்ளது.
தற்போது உள்ள சட்டத்தில், ஒன்றிய அரசு எங்கெல்லாம் பணிகள் உள்ளனவோ அனைத்துக்கும் அஞ்சல் மூலம் கடிதங் கள் பெறுவது சேகரித்தல் பட்டுவாடா செய்யும் பிரத்யேக உரிமையை அரசுக்கு வழங்குவதோடு தபால் தலை வெளி யிடுவது விற்பனை தபால் அட்டைகள் கடிதங்கள் பார்சல்கள் பணப்பட்டுவாடா ஒன்றிய அரசு விதிமுறைகள்படியே தபால் அலுவலகங்கள் மேற்கொள்கிறது. தற்போதைய மசோதாவில், பிரத்யேக உரிமை தபால் அலுவலகமே கொண்டிருக்கும் என்றுள்ளது.
தற்போதைய மசோதாவில் தபால் அலு வலகத்தின் பணிகள் தொடர்பாக ஒன்றி ய அரசு வரையறை செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பானவைகளாக உள்ள கடிதங்கள், பார்சல்கள் ஆகியவற்றை இடைமறித்து பார்த்தல் கையகப்படுத்தல் அழிப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் தற்போது இருக்கின்றது. பொது அமைதி நலன் அவசரம் ஆகிய காரணங்களுக் காக மேற்கொள்ளலாம் என்றுள்ளது.தற்போது கொண்டுவந்துள்ள மசோதா வில், அரசு பாதுகாப்பு ,நட்பு நாடுகளு டனான உறவுகள் பொது உத்தரவு அவசர நிலை பொது பாதுகாப்பு மேலும் மசோதாவில் உள்ள அம்சங்களை மீறுதல் சட்டத்திற்கு புறம்பானவைகளில் ஒன்றிய அரசு உத்தரவுபடி சம்பந்தப்பட்ட பொருப்பு அதிகாரி கடிதங்கள் பார்சல்களை இடைமறித்தல் அதிகாரத்தை வழங்கி உள்ளது.
இயக்குனர் ஜெனரல் நியமனத்தில் மாற்றமில்லை அஞ்சல் சேவைகள் பணி நேரம் வகை கட்டணம் நிர்ணயம் ஒன்றிய அரசு உத்தரவுபடி டைரக்டர் ஜெனரல் முடிவு செய்யலாம் என்று தற்போது உள்ளது.தற்போதைய மசோதாவில், அஞ்சல் சேவைகளில் தேவைப்படும் நடவடிக்கை, விதிமுறைகள் உருவாக்குவது தபால் தலை விற்பனை அஞ்சலகப் பொருட்கள் விற்பனை அனைத்திலும் முடிவு எடுக்க டைரக்டர் ஜெனரல் வசம் அதிகாரம் அளி த்துள்ளது.
கே.முருகன் முன்னாள் தேசிய பொது செயலாளர் AIYF
தடைசெய்யப்பட்டவை, வரி விதிக்க கூடிய கடிதம் பார்சல்கள் தொடர்பாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட முகவரி யாளர் அல்லது அவரது முகவரையோ நேரில் ஆஜராக விளக்கம் கேட்கவும் தபால் அலுவலக அதிகாரிக்கு அதிகாரம் தற்போது உள்ளது. தற்போதைய மசோதா இதில் திருத்தம் செய்துள்ளது. தபால் நிலைய அதிகாரி சம்பந்தப்பட்ட பார் சலை சுங்கத்துறை அல்லது குறிப்பிட்ட நிர்வாகத்திற்கு அனுப்புவதற்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
தடைசெய்யப்பட்ட பொருட்கள் அனுப்பு வது, தபால்கள், பார்சல்கள் திருட்டு சரி வர கையாளாமல்விட்டு அழிப்பது போன் ற குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் அஞ்சலக அதிகாரிக்கு 7 வருட சிறை, அபராதம் விதிக்க தற்போதைய சட்டத் தில் உள்ளது. அதேநேரம் கடிதங்கள் தொலைந்து போவது தவறுதலாக பட்டு வாடா செய்வது காலதாமதமாக பட்டு வாடா செய்தல் சேதப்படுத்துவதில் அபராதம் தொடர்பாக சில விலக்கு அரசு வசம் தற்போது இருக்கிறது. தபால் நிலை ய அதிகாரி வேண்டுமென்றே செயல் பட்டு இருந்தால் என்பதை தவிர்த்து விலக்கு அளிக்கலாம் என்றும் ஒன்றிய அரசு என்பதற்கு பதிலாக தபால் அலு வலகமே முடிவு செய்யலாம் என்று மசோதா குறிப்பிட்டுள்ளது.CPI தேசிய நிர்வாக குழு உறுப்பினர் P. சந்தோஷ் குமார்
நிறைவாக, இந்த மசோதாவை மாநிலங் களவையில் கொண்டுவந்த போது இதன் மீது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேரள மாநிலங்களவை உறுப்பினர் CPI தேசிய நிர்வாக குழு உறுப்பினர் P. சந்தோஷ் குமார் மசோதாவில் தெளிவில்லை என்றும் காலிப்பணி இடங்கள் நிரப்ப வேண்டும் என்று கூறியதோடு தபால் அலுவலகங்களை செயல் படாத அமைதியான பகுதியாக மாற்றி தனியார் கொரியர் நிறுவனங்கள் பலன் பெற வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். மக்களுக்கு தொடர்பு பாலமாக இருக்கும் மிகப்பெரிய அரசுத் துறை செயல் படாத நிலை உருவாக்க முயற்சி குறித்து விழிப்போடு நாம் செயல்பட வேண்டும்.