பால்வளத்துறை ஆணையராக இருந்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ் வரலாற்று ஆவண காப்பக ஆணையத்திற்கு மாற்றப்பட்டார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி ஆணையராக கோலோச்சிய பிரகாஷ் அப்போதைய அமைச்சர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்.
இதை அடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் கலை மற்றும் கலாச்சாரத்தை ஆணையராக மாற்றப்பட்டார் மீண்டும் மூன்றே மாதங்களில் கல்லா கட்டும் பதவிக்கு வந்து அமர்ந்தார் பிரகாஷ் ஆனால் அந்த மகிழ்ச்சி அவருக்கு ஆறு மாதம் ஆறு மாதங்கள் கூட நிலைக்க
வில்லை.
கொரோனா உச்சகட்டத்தில் இருந்தபோது மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் தெருத்தெருவாக தகரம் வைத்து தடுப்பு அமைக்கும் பணிகளையும் இதர பணிகளையும் தீவிரமாக செய்து வந்தார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த போது எப்போதுமே பந்தா காட்டிய பிரகாஷ் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவருக்கு மிக நெருக்கமாக இருந்தார் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு டம்மி பதவிக்கு தூக்கி அடிக்கப்பட்டார்.
கலை மற்றும் கலாச்சாரத் துறை ஆணையராக மூன்று மாதம் காலம் பணியாற்றிய பிரகாஷ் மீண்டும் பசையுள்ள பதவியான பால்வளத் துறை ஆணையர் பதவிக்கு கடந்த ஜனவரி மாதம் வந்தார்.
திமுக ஆட்சியில் பிரகாஷ்க்கு பால்வளத் துறை ஆணையர் பதவி எப்படி கிடைத்தது என்று ஐ.ஏ.எஸ். வட்டாரத்திலேயே பெரும் பேசு பொருளாக இருந்தது.
எந்த ரூட்டை பிடித்து பிரகாஷ் இப்படி அதிகாரமிக்க பதவிக்கு வந்தார் என அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பட்டிமன்றமே நடந்தது இந்த நிலையில் முதல்வருக்கு அனுப்பப்பட்ட முக்கிய ரகசிய கோப்பில் பிரகாஷ் பற்றி பல தகவல்கள் இடம் பெற்று இருந்தது.
அதனை தொடர்ந்து பால்வளத்துறை ஆணையராக இருந்த பிரகாஷ் வரலாற்று ஆவணகாப்பகத்துக்கு மாற்றப்பட்டார் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மூன்று முறை பணிமாற்றம் செய்யப்பட்டு இப்போது நான்காவது முறையாக இந்த இடத்திற்கு சென்றுள்ளார் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.
பிரகாஷ் ஐஏஎஸ் நகராட்சி நிர்வாக இயக்குனராக இருந்த பொழுது பாடகி சின்ன குயில் பெயர்கொண்ட ஒரு நகராட்சி ஆணையர் உடன் மிக நெருக்கமாக இருந்ததாகவும் அவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு பங்களாக்கள் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த ஆணையர் பூந்தமல்லி அதிமுக எம்எல் ஏ வாக இருந்த ஏழுமலை மதிக்காமல் அவமானப்படுத்தி சென்றாராம் அத்தகைய பெண் அலுவலர் தற்போது ஓசூரில் முகாமிட்டு இருக்கிறாராம் சென்னை மதுரவாயல் பைபாஸ் திருவேற்காடு பூந்தமல்லி ஆவடி அண்ணா நகர் போன்ற பகுதிகளில் பிரகாஷ் மற்றும் அந்த அதிகாரி பெயரில் பல கோடி ரூபாய் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளதாம்.
இந்த தகவல் முதல்வர் ஆபிசுக்கு உடன்பிறப்புகள் புகாராக எழுதி அனுப்பி வருகிறார்களாம் எந்த நேரத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அந்த பெண் அதிகாரிக்கும் பிரகாஷ்கும் சொந்தமான இடத்தில் ரெய்டு நடக்கலாம் என்கிறார்கள் அதிகாரிகள்.