chennireporters.com

நெல்லை பா.ஜ.க பெண் நிர்வாகியின் மகன் மீது குவியும் பாலியல் மற்றும் மோசடி புகார்கள்.

சமூக வலைதளங்களில் நெல்லை பா.ஜக பெண் நிர்வாகி மகன் மீது பல பாலியல் புகார்களும் மோசடி புகார்களும் நிலுவையில் உள்ளது. ஆனால் சென்னை மாநகர போலீசார் அவன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் தெரியவில்லை. காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் அந்த பொம்பள பொறுக்கி நாயை காப்பாற்றி வருகிறார்கள் என்று ஒரு பதிவு சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.  நமது அலுவலகத்திற்கு வந்த பதிவில் இவ்வாறு சொல்லப்பட்டிருந்தது.

போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர்.

கிண்டி அனைத்து மகளீர் காவல் நிலையம்
CRIME NO: 10/2023
294 பி, 354, 354 ஏ, 417, 420, TN PROHIBITION OF HARRASMENT OF WOMAN ACT 4 IPC.

அண்ணாநகர் அனைத்து மகளீர் காவல் நிலையம்
CRIME NO: 21/2023
SECTIONS: 498A, 420, 506 (1).இவன் பெயர் மதன், வயது 42, த/பெ. சண்முகராஜா. பல பெண்களை கற்பை சூறையாடியுள்ள இவன் போலீஸ் தேடுவதால் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்று வருகிறான். இவனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவனது பாஸ்போர்ட் முடக்கப்பட வேண்டும். இவனால் சென்னை நகரில் வேளச்சேரி, சூளைமேட்டைச் சேர்ந்த இரண்டு அப்பாவி பெண்கள் 2 பேர் கற்பு பறிக்கப்பட்டு திருமண மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர்.வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மதனை கைது செய்ய போலீஸ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. காரணம் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை மதன் பணம் கொடுத்துள்ளான். நேர்மையான காவல் அதிகாரிகள் இதனை கொஞ்சம் சீரியசாக பாருங்கள். CWC SP ஜெயமான அதிகாரியும், ஒரு இன்ஸ்பெக்டர் ஆகியோர் மதனுக்கு முழு ஆதரவாக செயல்பட்டு அவனை காப்பாற்றி வருவதாக கூறப்படுகிறது.

தனது அம்மா விஜியாவுடன் மதன் மது அருந்தும் காட்சி.

இவனது தொழில் பெண்களிடம் பேஸ்புக்கில் பேசி பழகி தனது வசீகர (இரட்டை அர்த்தம்) பேச்சால் மயக்கி அவர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அனுபவிப்பான். அந்தப் பெண் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தால் நம்ப வைப்பதற்காக வீட்டில் வைத்து தனது தாய் முன்பு தாலி கட்டுவான். ஆனால் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய மாட்டான்.

தனது வீட்டில் அந்தப் பெண்ணை தங்க வைத்து மேலும் அனுபவிப்பான். பெண் கர்ப்பம் அடைந்தால் கருவை கலைக்கச் சொல்லி வற்புறுத்துவான். கேட்க மறுத்தால் உணவில் மருந்து கொடுத்தோ அல்லது கீழே தள்ளி விட்டோ கடினமான பளுவை தூக்க செய்து கருவை கலைக்க வைத்து விட்டு அந்த பெண்ணை விரட்டியடித்து விட்டு வேறு பெண்ணை தேடி சென்று விடுவான்.

அந்தப் பெண் முன்பே குடிபோதையில் பல வேசிப் பெண்களை அழைத்து உடலுறவு கொள்வான். ஆபாசமாக சேட்டிங் செய்வான். இவனுக்கு சென்னை நகர குழந்தைகள், பெண்கள் தடுப்புப்பிரிவில் பணிபுரியும் பெண் சாமி பெயர் கொண்ட  இன்ஸ்பெக்டர் நல்ல உறவில் உள்ளதாக தகவல். இவனால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை கேள்விக்குறியான இரண்டு பெண்கள் (அம்மு, ) (குட்டி) என்ற இரண்டு பெண்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

கிண்டி அனைத் மகளிர் காவல் நிலையத்திலும், அண்ணாநகர் மகளீர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். அது தொடர்பாக மதன் மீது கிண்டியில் CRIME NO; 10/2023, பிரிவுகள் 294 பி, 354, 354 ஏ, 417, 420 மற்றும் பிரிவு 4 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல குட்டி புகாரின் பேரில் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மதன் மீது CRIME NO: 21/2023, 498A, 420, 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மதன் தலைமறைவாகி விட்டார்.

இந்த புகார்களில் அம்முவின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மதனிடம் பணம் பெற்றுக் கொண்டு வேண்டுமேன்றே காலம் தாழ்த்தி வந்தனர். வழக்குப்பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து செய்து விஷயத்தை கமுக்கமாக முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு cwc யில் பணியாற்றும் உயர் அதிகாரிக்கு ரூ. 6 லட்சம் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது. மதனுக்கு ஆதரவாக செயல்பட்டு சென்னை நகர CWC க்கு பரிந்துரைத்ததாக தெரிகிறது.மேலும் கணவனை இழந்த அந்த பெண் இன்ஸ்பெக்டர்  மகா சாமியின் பெயர் கொண்டவர் இந்த விஷயத்தில் மதனுக்கு ஆதரவாக செயல்பட்டு அவரை கைது செய்யவிடாத அளவுக்கு போலீசின் செயல்பாடுகள் அனைத்தையும் தகவல்களையும் மதனுக்கு பெண் இன்ஸ்பெக்டர் சொல்லி வருகிறாராம்.

 

இவை அனைத்தும் பெண்கள் ஆணையத்துக்கு புகாராக சென்றதும் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி திருமதி குமாரி அந்த ஜெயமான பெண் எஸ்பியை  நேரில்  அழைத்து கண்டித்துள்ளார். அதன் பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களை ஏமாற்றும் மன்மதன் மதன்.

இந்த மதன் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக லண்டனில் தமிழ்ச்சங்கம் துவங்கி நடத்தி வருகிறாராம். இவனுக்கு பல பெண்களுடன் தகாத உறவும், கள்ளத் தொடர்பும் உள்ளது. இவரது தாய் விஜயா திருநெல்வேலி பாஜகவில் ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவு நிர்வாகியாக உள்ளார். பிஜேபிக்காக தனது பெயரை விஜயா மாமி என மாற்றியுள்ளார். விஜயா மீது நெல்லை, தூத்துக்குடியில் விபசாரத் தொழில் செய்து பின்னர் பாஜக செல்வாக்கு மூலம் போலீசில் இருந்து தப்பி வந்ததாக கூறப்படுகிறது

 

பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பல ரவுடிகள் பாலியல் குற்றவாளிகள் பொம்பள பொறுக்கிகள் நிறைந்துள்ள கட்சியாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் பாஜகவை பெண்களுக்கு எதிரான கட்சியாகவும் பொம்பளை பொறுக்கிகள் கட்சி என்றும் சொல்கிறார்கள் அப்படியா சொல்கிறார்கள் என்றால் அப்படித்தான் சொல்கிறார்கள். என்று நெட்டிசன்கள் கமென்ட் அடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க.!