chennireporters.com

இன்று முதல் பணப் பிச்சை நிறுத்தம்….

பிச்சைக்காரர்களுக்கு (உணவு + தண்ணீர்) கொடுங்கள்ஆனால் ஒரு ரூபாய் கூட பணமாக கொடுக்ககூடாது. மும்பை-புனே ஹைதராபாத்தில் அனைத்து விதமான பிச்சைக்காரர்களை கட்டுபடுத்த வித்தியாசமான இயக்கம் தொடங்கியுள்ளது.
எந்த வகையினரும் (பெண், ஆண் ,மற்றும் முதியவர் மாற்றுத்திறனாளி குழந்தைகள்) பிச்சை எடுத்தால் பணத்திற்கு பதிலாக (உணவு + தண்ணீர்) கொடுப்போம், அப்படி செய்தால் இன்று முதல் அவர்கள் பணத்தை பிச்சை எடுக்க மாட்டார்கள்

இதன் விளைவாக, சர்வதேசதேசியமாநில அளவில், பிச்சைக்காரர்கள் கும்பல் உடைந்து, குழந்தை கடத்தல் தானே நின்றுவிடும்.இத்தகைய கும்பல்கள் குற்ற உலகில் முடிவடையும்

பதிவை பகிரவும்மேலும் ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள் உங்களுக்கு விருப்பமானால் காரில் 2 பிஸ்கட்கள்வைத்து கொள்ளுங்கள்.பணத்தை வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் பணம் கொடுக்காதீர்கள்.

இதேபோல சென்னை முக்கியமான இடங்களில் அம்பத்தூர், அண்ணா நகர், ரவுண்டானா
தி. நகர் தேனாம்பேட்டை வள்ளுவர் கோட்டம், ஈசிஆர் சாலை என முக்கிய பகுதிகளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு சிலருக்கு சாப்பாடு கொடுத்தாலும் சாப்பாடு வேண்டாம் வேறு ஒருவர் கொடுத்துவிட்டார் காசு மட்டும் கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.

எனவே மனிதம் காக்க மனிதநேயம் பாதுகாத்திட இனிமேல் பிச்சை போடுவதை தவிர்த்து அவர்களுக்கு வேறு ஒரு வேலை வாய்ப்பினை வழங்கிட வேண்டும் என்று சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இதையும் படிங்க.!