chennireporters.com

எழுத்தாளர் சமரன் பதிவிலிருந்து படித்ததில் பிடித்தது

கல் விளக்கு கோபுரம்

தொண்டை மண்டலத்தில் 24 கோட்டங்கள் இருந்தன. அவற்றுள் 13 கோட்டங்களை உள்ளடக்கிய பகுதியே செங்கல்பட்டு மாவட்டம்.

ஆமூர் கோட்டம் அதிலொன்று அதாவது மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆமூர் கோட்டமாகும்.

ஆமூர் கோட்டத்தில் மணி மேடு, மந்தைவெளி, சானான் குப்பம், இடையன் படல், பட்டிபுலம்,போன்றவை மிக முக்கியமானகிராமங்கள் ஆகும்.

தற்போது புலிக்குகை இருக்கும்பகுதியான திருவிழிச்சல் என்பதன் பிற்கால பெயரே இடையன் பாடல் தற்போதைய அதன் பெயர் சாளுவன்குப்பம்.

இந்த புலி குகைக்கு சற்று வடக்கே சுமார் 40 அடி உயரத்திற்கு சற்றே செங்குத்தான ஒரு பாறை உள்ளது அதன் உச்சத்தில் குடைந்தெடுக்கப்பட்ட கீழறைகள் அதாவது பொந்துகள் மூன்று வரிசையாக ஊரைப் பார்த்து அமைக்கப்பட்டிருக்கிறது.

முதல் வரிசையில் 6 பொந்துகள், இரண்டாம் வரிசையில் 4 பொந்துகள்,கடைசி வரிசை 6 பொந்துகளும், அதனோடு மேல்வாக்கில் ஆள் நிற்கும் பள்ளமும் கொண்டுள்ளது இப்பாறை.

ஆடுமாடுகளை மேய்க்க,அவை மேய்வதை கண்காணிக்க,இரவு நேரங்களில் அவைகளை பட்டியில்அடைத்து காவல் காக்க,

குறும்பர்கள் இந்த பாறை மீதுள்ள பள்ளத்தில் ஏறிநின்று விளக்கேற்றி காவல் காத்து
வந்தது தெரியவருகிறது. இப்பாறை அந்நாளைய காவல் கோபுரமா செயல்பட்டுள்ளது.

இதுபோன்ற விளக்குகளுக்குகல் விளக்குகள் என்று பெயர் மாமல்லபுரத்தில்
கண்டெடுக்கப்படும் காசுகள் குறும்பர்கள்காசுகள். இவர்களுடன் ரோமர்களுடன் வாணிபம் செய்ததாகவும் இங்கு குறும்பர்கள் ஆறுகாணி சதுர வடிவில்
கோட்டை கட்டி ஆண்ட தாகவும்,

இந்த கோட்டை புகழுடன் விளங்க ஏழு சாடி திரவியம் புதைக்கப்பட்டு
உள்ளதாகவும் குறிப்புகள் சொல்கின்றன.

இதையும் படிங்க.!