chennireporters.com

லஞ்சம் வாங்கிக் கொண்டு போலியான பத்திரத்தை பதிவு செய்த ஆவடி சப்-ரிஜிஸ்டார் மல்லிகேஷ்வரி.

போலியான ஆவணத்தை பதிவு செய்த ஆவடி பத்திரப்பதிவு அலுவலர் மல்லிகேஸ்வரி மீது பத்திரப்பதிவுத்துறை தலைவரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது .

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ளது சேக்காடு கிராமம் இந்த கிராமத்தில் சர்வே எண் 149/4 பட்டா எண் 536,  சிட்டா எண் 435.  40 சென்ட் காலி மனை அதாவது 17646 சதுர அடிகள் கொண்ட இடம்.  பாடி பகுதியை சேர்ந்த வால் மூர்த்தி என்பவருக்கு சொந்தமானது.

 

ஆவடி விளிஞ்சியம்பாக்கத்தை சேர்ந்த நாராயண பிரசாத் மற்றும் பாபு, விஜயலட்சுமி ஆகியோர் 3 பேரும் வால் மூர்த்திக்கு சொந்தமான இடத்தை போலியான ஆவணங்கள் மூலம் பதிவு செய்ய சப் ரிஜிஸ்டர் மல்லிகேஸ்வரி நேரில் சந்தித்தனர்.

நிலத்தின் உரிமையாளர் வராமலேயே பத்திரத்தை பதிவு செய்ய பல லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டு போலியான பத்திரத்தை பதிவு செய்ய மல்லிகேஸ்வரி சம்மதம் தெரிவித்தார்.

நிலத்தின் உரிமையாளர் ரிஜிஸ்டர் ஆபிசுக்கு வராமலேயே பத்திரத்தை ஆவடி பத்திரப்பதிவு அதிகாரி மல்லிகேஸ்வரி பத்திரத்தை பதிவு செய்தார்.

இந்த செய்தி நிலத்தின் உரிமையாளர் வால் மூர்த்திக்கு தெரிய வந்தது.  அதனை தொடர்ந்து வால் மூர்த்தி பத்திரப்பதிவுத்துறை தலைவர் சிவன் அருளுக்கு புகார் அளித்திருக்கிறார்.

அதனை தொடர்ந்து மல்லிகேஸ்வரி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆவணங்களை சரி பார்க்காமல் மல்லிகேஸ்வரி இதுபோன்ற முறைகேடான பல ஆவணங்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இடத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு மல்லிகேஸ்வரி பல லட்ச ரூபாய் நாராயண பிரசாத்திடம் பெற்றதாக சொல்லுகிறார்‌கள் வால் மூர்த்தி தரப்பினர்.

இதுகுறித்து மல்லிகேஸ்வரி அவரின் கருத்தை அறிய நாம் பலமுறை தொடர்பு கொண்டோம் அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை.

மல்லிகேஸ்வரி ஆவடி சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.

அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கிறது.

நீதிமன்றம் அரசுக்கு சொந்தமான இடங்களை பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள பல இடங்களை லஞ்சம் பெற்றுக் கொண்டு பதிவு செய்ததாக பல புகார்கள் பத்திரப்பதிவு துறை தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மல்லிகேஸ்வரி ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்ததிலிருந்து இதுவரை ஒரு முறை கூட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தவில்லை.

லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே உள்ள சில கருப்பு ஆடுகள் மல்லிகேஸ் வரியிடம் மாதம், மாதம் லஞ்சம் பெற்று வருகின்றனர் என்கிறார்கள் சில ஆவண எழுத்தாளர்கள்.

இதையும் படிங்க.!