chennireporters.com

அதிமுகவில் நடக்கும் குழப்பத்திற்கு திமுகவே காரணம் சசிகலா குற்றச்சாட்டு.

திருவள்ளூர்
அதிமுகவில் பிளவு என்பது நிச்சயம் திமுகவிற்கு தான் சாதகமாக அமையும்.

திமுகவிற்கே இது லாபம் எம்.ஜி.ஆர் வகுத்த சட்ட திட்டங்களை தனி ஒரு நபர் மாற்ற முடியாது.

திருத்தணியில் சசிகலா பேட்டி.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரசியல் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார் வி.கே.சசிகலா.

சசிகலாவுக்கு முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நரசிம்மன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சசிகலாவுக்கு பெண்கள் மலர்தூவி மேளதாளங்கள் முழங்க வரவேற்பளித்தனர்.

முன்னதாக மாபெரும் பைக் பேரணி நடைபெற்றது.

பின்னர் சசிகலா திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் செய்த அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் மலைக்கோயில் வளாகத்தில் நரிக்குறவர் பெண்கள் பாசி மாலையை சசிகலா அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்.

மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொண்டர்களை சசிகலா அவர்கள் சந்தித்து வருகிறார்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அதிமுக கொடியுடன் வாகனத்தில் வலம் வந்தார்.

அவரது ஆதரவாளர்களும் அதிமுக கொடியுடன் வலம் வந்தனர்.

அதிமுகவில் நடை பெறும் இந்த உட்கட்சிப் பூசலுக்கு திமுக தான் காரணம் என்று குற்றம் சுமத்தினார்.

சசிகலா வருகையால் திருத்தணி நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது.

இதையும் படிங்க.!