ரேபிடோ பைக்கில் அழைத்து சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட
கஞ்சா போதை ஆசாமியின் வெறிச்செயலில் சென்னை மாநகரமே அச்சத்தில் உறைந்து கிடக்கிறது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ரேபிடோ பைக் நிறுவனத்தை தடை செய்ய பொது மக்கள் வலியுறுத்தல்.
ரேப்பிடோ மோட்டார் பைக் ஓட்டுனர் நடன சபாபதி.
ரேப்பிடோ மோட்டார் பைக்கில் பயணம் செய்த இளம் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ரேபிடோ நிறுவனம் ஊழியர் கைது செய்யப் பட்டுள்ளார் இந்த செய்தி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 19ம் தேதி சென்னை கொட்டிவாக்கம் காவேரி நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னுடைய தங்கையின் வீட்டிற்கு பம்மலுக்கு சென்று விட்டு திரும்பி வர ரேபிடோவில் பைக் புக் செய்துள்ளார். தனது வீட்டிற்கு கொட்டிவாக்கத்துக்கு செல்ல ரேபிடோ பைக்கைகில் பயணம் செய்தார். பைக் ஓட்டுனர் நடன சபாபதியுடன் என்பவருடன் அந்தப் பெண் கொட்டிவாக்கம் சென்றுள்ளார். காவேரி நகர் ஆறாவது தெருவில் அந்த பெண் பயணியை இறக்கி விட்ட பைக் ஓட்டுனர் நடன சபாபதி திடீரென அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு தனது பேண்டை கழற்றி ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார்.
அப்போது அந்தப் பெண் சத்தம் போட்டு அவரை அடிக்க பாய்ந்து தனது வீட்டிற்கு ஓடி உள்ளார். உடனடியாக பொதுமக்கள் கூடியதும் ராபிடோ நிறுவன ஊழியர் நடனசபாபதி அங்கிருந்து தலைதரிக்க தப்பி ஓடினார். இது குறித்து அந்த பெண் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேப்பிடோ மோட்டார் பைக்கில் இனிமேல் பெண்கள், குடும்பத் தலைவிகள், பெண் குழந்தைகள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வைரல் ஆகி வருகிறது. தனியாகச் செல்லும் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராப்பிடோ பைக் ஓட்டுநரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பவில்லை. மேலும் தனியாகச் செல்லும் பெண்களிடம் நடுவழியில் நிறுத்தி கத்தியை காட்டி நகை பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தால் மக்களின் நிலை என்ன ஆவது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே ரேபிடோ நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காத நிலையில் இது போன்ற ஆபாச அநாகரீக செயல்கள் தொடர்ந்து நடை பெற்று வருவகிறது .அந்த நிறுவனத்திற்கு பெரும் அவப்பெயர் ஏற்படுத்துகிறது.
அது மட்டும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அந்த செயலியில் புக் செய்த பிறகு கட்டணம் தோராயமாக 50 ரூபாய் என்று காட்டினால் பைக் ஓட்டுநர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு இறக்கி விடும்போது பயணியிடம். 120 ரூபாய் என்று ஆஃபில் காட்டுகிறது. இதற்கு நான் என்ன செய்யமுடியும் என்று மிரட்டும் தொணியில் பேசி பணத்தை வாங்கிச்செல்கின்றனர்.
ஒரு பயணி தான் ரேபிடோ பைக்கை புக் செய்த போது ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஐம்பது ரூபாய் தான் காட்டுகிறது. பயணியை இறக்கி விடும் போது 150 ரூபாய் காட்டுகிறது என்று கேட்டால் ராபிடோ நிறுவனத்தில் பைக் ஓட்டும் நபர்கள் பயணம் செய்தவர்களை மிரட்டி ஆபாசமாக திட்டும் செயல் அதிகமாக நடந்தேறி வருவது கண்டனத்திற்குரியது எனவே தமிழக அரசு ரேபிடோ நிறுவனத்தை தமிழகத்தில் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
ராபிடோ நிறுவனத்தை நம்பி வரும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரேபிடோ நிறுவனத்தில் மோட்டார் பைக்குகளை வாடகைக்கு ஓட்ட வருபவர்களுக்கு அறிவுரைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் ரேபிடர் நிறுவனம் வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டை எழுந்துள்ளது. நிறுவனம் தனது பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ளவே விரும்புகிறதே தவிர பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இதுவரை எந்தவித நடவடிக்கையும் ராபிடோ நிறுவனம் எடுக்கவில்லை.
ரேப்பிடோ மோட்டார் பைக் ஓட்டுனர் நடன சபாபதி.
சம்பவம் நடந்து போது ரேபிடோ நிறுவன ஊழியர் நடன சபாபதி கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் சின்ன மலையில் இருந்து பைக்கை ஓட்டி வரும் வழியில் பைக்கில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.எனவே பொதுமக்கள் ரேபிடோ நிறுவனத்தில் பெண்களையோ குழந்தைகளையோ பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களை பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ரபிடோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எனவே அந்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அனுமதி இல்லாமல் இயங்கும் அந்த நிறுவனத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றனர் பொதுமக்கள்.