திருவள்ளூர் அருகேகடம்பத்தூர் அடுத்த கசவநல்லூத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். கூட்டுறவு துறையில் பணி நிரந்தரம் செய்து தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த அ.தி.மு.க பிரமுகர் ரமேஷ் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமரேசன் மகன் ஈஸ்வரன்.இவர் திருவள்ளூரில் உள்ள கூட்டுறவு துறை இணை பதிவாளர் அலுவலகத்தில் தற்காலிக கணினி ஊழியராக பணி புரிந்து வந்தார்.
இவரிடம் 2019 ம் ஆண்டு கூட்டுறவு துறையில் பணி நிரந்தரம் செய்து தருவதாக கடம்பத்தூரை சேர்ந்த அ. தி.மு.க பிரமுகர் ரமேஷ் என்பவர் கூறியுள்ளார்.மேலும் நிரந்தர வேலைக்கு 4 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த ஈஸ்வரன் முதல் தவணையாக 1 லட்சம் ரூபாயை கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் கொடுத்துள்ளார்.ஆனால் ரமேஷ் பணி நிரந்தரம் செய்து தராமலும், கொடுத்த பணத்தை இரண்டு வருடமாக திருப்பித் தராமலும் ரமேஷ் ஏமாற்றி வந்துள்ளார்.
இது குறித்து ஈஸ்வரன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரிடம் புகார் அளித்தார்.இதையடுத்து கடம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தும் படி எஸ்.பி. உத்தரவிட்டார்.
இதையடுத்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரமேஷை தேடி வருகின்றனர்.
வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த ரமேஷ் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் மா.பா பாண்டியராஜன் அவர்களின் நெருங்கிய ஆதரவாளர் என கடம்பத்தூர் போலீசார் தெரிவித்தனர்.
ரமேஷுக்கு பேரம்பாக்கம் கீழச்சேரி சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்றும் நடத்தி வருகிறார்.இன்னும் இவரிடம் ஏமார்ந்தவர்கள் யார், யார் என்று போலீஸ் தனி லிஸ்ட் போட்டு விசாரித்தால் பாதிக்கப்பட்டவர் தாமாக முன்வந்து புகார் அளிப்பார்கள்.
அந்த வாய்ப்பை எஸ்.பி. பொது மக்களுங்கு வழங்க வேண்டும். என்று கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த தி.மு.க பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.