கர்நாடகாவில் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட காவிக்கும்பலுக்கு ஒற்றை ஆளாக பதிலடி கொடுத்த இஸ்லாமிய மாணவியின் வீரத்தைக் கண்டு உலகம் முழுவதும் உள்ள பெண்ணிய சமூக செயற்பாட்டாளர்களும், மாதர் சங்க அமைப்பினர் பலரும் பெருமை கொள்கின்றனர்.
ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் மதவாதத்தை ஆதரிக்கும் ஒரு கட்சிக்கு எதிராக ஒற்றை ஆளாக களத்தில் நின்று போராடிய அந்த இளம் போராளிக்கு உலகம் முழுவதும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
அவரை சூழ்ந்து கொண்டு மதவாத சக்திகள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் விடும் பொழுது அவர்களுக்கு எதிராக நின்று அல்லாஹு அக்பர் என்று தன் கைகளை உயர்த்தி ஆவேச குரலுடன் வீரம் பொங்க அந்த மாணவி கோஷமிடும் காட்சி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
vedio credit THG இந்த சம்பவத்தால் கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பான விவகாரத்தில்மாணவர்களும், பெற்றோர்களும் அமைதி காக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிமோகாவில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது பா.ஜ.க.அரசு.