chennireporters.com

திருப்பூர் போலி நிருபர்களை; களையெடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். வலுக்கும் நிஜங்களின் குரல்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் லஞ்சம் வாங்குவதில் முதலிடம் வகிக்கும் அலுவலகங்களான பத்திரப்பதிவு, வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு மதுபான கடை, ஆகிய இடங்களில் நிரம்பி வழியும் போலி பத்திரிக்கை விசிட்டிங் கார்டுகளை கண்டு அதிகாரிகள் தலைதெறிக்க ஒடுகிறார்களாம்.

பெயிலான நானே ஐஏஎஸ் ஆயிட்டேன் ...

திருப்பூரில் மொத்த  உள்ள 728  ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் 216 பேர் உண்மையான பத்திரிக்கையாளர்கள் மீதமுள்ள 512 பேர் போலிப் பத்திரிக்கையாளர்கள் என்று தெரியவந்துள்ளது.

இனி வரும் காலங்களில் சட்ட விரோத மண் கடத்தல், போலி மதுபான விற்பனை , லாட்டரி சீட் விற்பனை, போதைப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மற்றும் அதற்கு உடந்தை போகும் அரசு அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இது போன்ற பாவ செயல்களில் ஈடுபடும்  அனைத்து  சமூக விரோதிகளின் முகத்திரையும் கிழித்து சமூக வலைதளங்களிலும் செய்தி ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் செய்தி வெளியிட்டு உண்மையை உலகிற்கு தெரியபடுத்த வேண்டும். 

அடுத்த வருட தீபாவளிக்குள் தமிழகத்தில் ஊழல் இல்லாத சட்ட விரோத செயல்கள் இல்லாத மாவட்டமாக நமது திருப்பூர் மாவட்டத்தை உருவாக்குவதில் லட்சியமாகக் கொண்டு லஞ்சம் வாங்காத பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஒருங்கிணைத்து. செயல்படுவதே நமது திருப்பூர் மாவட்டத்தின் உண்மையான
செய்தியாளர்களின் நோக்கமாகக் கொண்டு பாடுபடுவோம்.  ஊழல் இல்லாத திருப்பூர் மாவட்டத்தை உருவாக்குவோம் என்று உறுதி கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

செய்தித் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று போலி பத்திரிகையாளர்கள் திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிப்பதை கட்டுப்படுத்துமாறு அமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இது போன்ற அங்கீகாரம் இல்லாத விசிட்டிங் கார்டு மட்டும் அச்சடித்துக் கொண்டு அரசு அதிகாரிகளை
மிரட்டிக்கொண்டு பணம் சம்பாதிக்கும் போலி பத்திரிக்கையாளர்களை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!