chennireporters.com

ஹமாஸ்க்கு அமைப்பினருக்கு எதிராக ஒரு லட்சம்படை வீரர்களை குவித்தது இஸ்ரேல்.

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தனது எல்லையில் ஒரு லட்சம் படை வீர ர்களை குவித்து தனது பலத்தை காட்டியுள்ளது. இருப்பினும் ஹமாஸ் இமைப்பினர் இஸ்ரேலுக்குள் உடுருவி வருகின்றனர்.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர்  இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடர்ந்து நடத்திவருகினர். ‘ஆபரேஷன் அல்-அக்‌ஷா பிளட்’ என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் 20 நிமிடங்களில் சுமார் 5000 ராக்கெட் குண்டுகளை வீசியது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். சிறிய ரக விமானங்கள் கடல் எனப் பல வழிகளில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர்.

இஸ்ரேல் – ஹமாஸ் இரு தரப்பினருக்கும் இடையேயான சண்டை இரண்டாவது நாளானா நேற்றும் நீடித்தது. இதில் இதுவரை இல்லாத அளவில் கடுமையான உயிர்சேதங்கள் ஏற்பட்டது. இஸ்ரேல் மக்கள் பலரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது

ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் ஆக்கிரமிப்பில் இன்னும் 8 பகுதிகள் இருப்பதாகவும் அனைத்து பகுதிகளும் முழு கட்டுப்பாட்டில் வரும் வரை ஹமாஸ்க்கு எதிரான போர் தொடரும் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் இறந்தவர்களது எண்ணிக்கை ஏறத்தாழ 700 பேர் என தெரிவிக்கின்றனர். காஸாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் ராணுவம் தோரயமாக சுமார் 1 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. காஸாவிலும் உயிரிழப்புகள் அதிகரித்த நிலையில் காஸாவில் பலியானவர்களில் பலர் ஹமாஸ் அமைப்பினர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலின் தெற்கு பகுதியில் அதிக அளவில் தாக்குதல் நடைபெறுகிறது. தெற்கு பகுதியில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 260 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் இதுவரை 700 பேர் கொல்லப்பட்டனர். இசை நிகழ்ச்சியில் இருந்து பலர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க.!