திருவள்ளூர் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கறிஞர் கைது.

July 22, 2021

By இரா. தேவேந்திரன்.

திருவள்ளூர் அருகே விவாகரத்துக்காக வந்த பெண்ணிடம் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நிர்வாண படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என பணம் கேட்டு மிரட்டியதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது குறித்து திருவள்ளூர் மகளீர் போலீசார் கூறியதாவது:

2 நாட்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு வந்த பெண்ணிடம் கள்ளக் காதலில் ஈடுபட்ட வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மறைவதற்குள் அடுத்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் விவாகரத்து பெறுவதற்காக திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் டார்ஜன் என்பவரிடம் அந்த இளம் பெண் அணுகியுள்ளார்.

அப்போது ஆவணங்களை வீட்டுக்கு கொண்டு வருமாறு கூறியதையடுத்து அந்த பெண் மணவாளநகரில் உள்ள டார்ஜன் வீட்டிற்கு சென்ற போது குளிர்பானம் கொடுத்துள்ளார்.

அதை குடித்த சிறிது நேரத்தில் அந்தப் பெண் மயங்கி விட்டதாகவும், அப்போது வக்கீல் தன்னை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உன்னை நிர்வாணமாக எடுத்த படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவேன் எனக் கூறி அந்தப் பெண்ணிடம் வக்கீல் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி 3 லட்சம் ரூபாய் வரை பெற்றதாக கூறப்பதுகிறது.

தன்னை  உல்லாசத்திற்கு அழைத்து அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும் அந்த இளம் பெண் திருவள்ளூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் காவல் ஆய்வாளர் ராஜாமணி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டார்ஜனை சிறையில் அடைத்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு வந்த பெண் தகராறில் தொடர்புடைய வழக்கறிஞர் வெங்கடேசன் என்பவரை சத்தியாவின் குடும்பத்தினர் வெட்டி கொலை செய்த சம்பவம் நடந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கறிஞர் டார்ஜனை ( புரட்சி பாரதம்) பதவியிலிருந்து அந்த கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி நீக்கி உத்தரவிட்டார்.

Share:

இரா. தேவேந்திரன்.

August 7, 2021

Leave a Comment