chennireporters.com

திருத்தணி முருகன் கோயிலில் பதற்றம். கோயில் நிர்வாகிகளுக்கும் சுமைதாரர்களுக்கும் மோதல்.

சாமி தூக்குபவர்களுக்கும் கோயில் நிர்வாகத்துக்கும் மோதல் வெடித்துள்ளது. வீதி உலா போகவேண்டிய மூலவர் தயாராக இருந்தும் கோயில் நிர்வாகிகளின் பிடிவாதத்தால் ஊர்வலமாக போகவேண்டிய முருகப்பெருமான் சோகமாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்.

இந்த செய்தி திருத்தணி முருக பக்தர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திருத்தணி முருகன் கோயிலில் பதற்றம் நிலவி வருகிறது. திருத்தணி முருகன் கோயில் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து திருத்தணி அருகே உள்ள அகூர் மற்றும் தரனி வராகபுரம் என்ற இரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் திருத்தணி முருகன் கோயிலில் சாமியை ஊர்வலமாக தூக்கிச் செல்லும் வேலையை செய்து வருகின்றனர்.

மிராசு முறை வழக்கத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைப்பணி செய்து வருகின்றனர்.  இவர்களுக்கு கோயில் நிர்வாகம் எந்தவித சம்பளமோ, ஊக்கத்தொகையும் வழங்குவதில்லை. மாறாக (12 .1/2) பணிரெண்டரை கிலோ அரிசி, வெற்றிலை பாக்கு, கொஞ்சம் சாமி பிரசாதம் மட்டும்தான் வழங்குவார்கள்.

சாமியை தூக்கிச் செல்வதற்கு தேவைப்படும். எந்தவித உபகரணங்களையும் கோயில் நிர்வாகம் வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். தண்டு கட்டுவதில்லை கொடை இல்லை அம்பேரி சண்டோல் பெற்ற மார்க்ஸ் தீவட்டி போன்ற எந்த உபகரணங்கள் இல்லாமல் சாமி வீதி உலா போய்வருகிறார்.

அதேபோல கோயிலில் பல புரோக்கர்கள் அதிகரித்து வருகின்றனர்.அவர்கள் வெளி ஊரிலிருந்து வரும் பக்தர்களை தனியாக அழைத்துச் சென்று சிறப்பு தரிசனம் செய்ய சாமியை பார்க்க பெரிய கட்டணத்தை வசூல் செய்து உடனடியாக சாமியை பார்க்க அனுமதிக்கின்றனர்.

ஆனால் நீண்ட நேரம் பொதுமக்கள் காத்து வருகின்றனர். அதேபோல, கோயில் நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ஐயர்கள் ,அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் இலவசமாக எந்தவிதமான தங்கு தடையும் இன்றி சாமியை இலவசமாக தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி வழங்குகிறது.

ஆனால் இந்த சாமியை தூக்கும் சீர்பாத தாங்கிகள் என சொல்லப்படுகிற சாமி சிலை தூக்கும் தொழிலாளர்களுக்கு சாமியை பார்க்க அனுமதி இல்லை. மாறாக கோயில் நிர்வாகத்திற்கு சென்று கட்டணம் செலுத்தி விட்டு தான் சாமியை கும்பிட அனுமதிக்கிறார்கள். சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் எங்களுக்கு மட்டும் ஏன் தடை.

அதேபோல தலைமுறை தலைமுறையாக சாமி சிலையை தூக்கி வரும் எங்களுக்கு கோயில் நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இவர்கள் முன்வைக்கின்றனர். இந்த நிலையில் இன்று அக்டோபர் 24ம் தேதி சாமியை ஊர்வலத்திற்கு மாலை 6மணிக்கு எடுத்து செல்ல வேண்டும்.

ஆனால் இரவு 8மணி வரை வீதி உலா தொடங்கவில்லை. சாமி தூக்கும் தொழிலாளர்கள் கோயில் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். கோயில் நிர்வாகத்தை சேர்ந்த பேஸ்காரர் ராம மூர்த்தி, அன்பழகன் , உக்ரானம் ராம் மூர்த்தி ஆகியோரின் பிடிவாதத்தால் இந்த தொழிலாளர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தாமல் இவர்களை புறக்கணித்து வருகின்றனர்.

இவர்கள் ஏதோ தீட்டுப்பட்ட சமூகத்தைப் போல புறக்கணிக்கப்படுவதாக இவர்கள் குற்றச்சாட்டுகின்றனர். அது குறித்து கோயில் நிர்வாகம் எந்தவித பதிலையும் வழங்கவில்லை. கடந்த மூன்று நாட்களாக இவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதாக கூறுகின்றனர்.

இதுவரை கோயில் பேஸ் காரர்களோ நிர்வாகமோ அல்லது கோயில் இணை ஆணையர் ரமணியோ இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் இவர்கள் சாமியை தூக்கமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹோம் எனும் மந்திரத்தை சொல்லி குறைகளை தீர்க்கும் வல்லமை படைத்த முருகனிடம் கோரிக்கை வைக்கும் இந்த ஊழியர்களின் கோரிக்கையை கோயில் நிர்வாகம் காது கொடுத்து கேட்கவில்லை.

அந்த திருத்தணி முருகனாவது கோரிக்கையை நிறைவேற்றுவாரா என்று காத்திருக்கின்றனர் இறைவனை தனது தோள்களிலில் தூக்கி சுமக்கும் சுமைகாரர்கள். திருத்தணி முருகன் கோயிலில் பணியாற்றும் கோயில் ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு புரோக்கர் வேலை செய்து நாள் ஒன்றுக்கு ஒரு நபர் ஏறக்குறைய ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை பாக்கெட் மணியாக எடுத்துச் செல்லுகின்றனர்.

அதேபோல ஒவ்வொரு நாளும் மூலவர் மற்றும் உற்சவர் இடத்தில் பணியில் இருக்கும் ஐயர்கள் அள்ளி குவிக்கிறார்கள். ஒவ்வொரு ஐயர்களின் சொத்து மதிப்பு கோடிகளைத் தாண்டும் என்கின்றனர். அந்த அளவிற்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள் ஐயர்கள்.

ஐயர்கள் இவர்களது உறவினர்கள் உறவினர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் நண்பர்கள் என வரும் அனைவருக்கும் ஓசியில் சாமி தரிசனம் செய்ய ஆர்வம் காட்டும் இவர்கள் தலைமுறை தலைமுறையாக சாமியை தூக்கும் சாமியை பல்லக்குத்துக்கும் எங்களுக்கு அனுமதி மறுப்பதற்கான காரணம் என்ன?

திருத்தணி முருகன் கோயில் வணிகமயமாகி எல்லா தரப்புகளிலும் வருமானம் சம்பாதித்து வருகிறார்கள். கோயில் வளாகத்தில் உள்ள கடை ஊழியர்களை கூட ஓசியில் சாமி கும்பிட கோயில் நிர்வாகம் அனுமதிக்கிறது. ஆனால் எங்களை அனுமதிப்பது இல்லை. அனுமதிக்காததற்கு காரணம் என்ன என்பதை இதுவரை ஐயர்களும் கோயில் நிர்வாகமும் சொல்ல மறுக்கிறது.

இவைகளை தட்டிக் கேட்க வேண்டிய கோயிலில் உள்ள நிறைகுறைகளை சரி செய்ய வேண்டிய அறங்காவலர் குழு பொங்கல் வடை தட்டு முறுக்கு புளியோதரை சாப்பிட்டு விட்டு ஊர் கதையைப் பேசி விட்டு கிளம்பி விடுகிறார்கள். திருத்தணி முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகா குமரா வேலெடுத்து வா ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவு பாடம் புகட்டு.

இதையும் படிங்க.!