chennireporters.com

பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை திட்டமிட்டு பழி வாங்குகிறதா தமிழக அரசு!?

ராஜஸ்தானில் நடை பெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு பாதுகாப்பு பணிக்காக தமிழகத்தை சேர்ந்த ஐந்து பெண் உயர் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.  தேன்மொழி ஐ .ஜி,  மல்லிகா ஐ.ஜி, செந்தில்குமாரி ஐ.ஜி,  லட்சுமி டி.ஐ.ஜி,  தீபா சக்தியின் ஏ.ஐ.ஜி ஆகியோர் கடந்த ஐந்தாம் தேதி ராஜஸ்தான் சென்றுள்ளனர்.

 

ஐ.ஜி . தேன்மொழி ஐ.பி.எஸ்

இவர்கள் தேர்தல் முடிந்ததும்  வரும் 29-ம் தேதி மீண்டும் தமிழகத்திற்கு வருவார்கள் என்கிறது போலீஸ் வட்டாரம். இது குறித்து நாம் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது காலம் காலமாக வெளிமாநில தேர்தல் பாதுகாப்பு பணிக்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்புவது வழக்கம் தான்.  குறிப்பாக டம்மி போஸ்டிங்கில் உள்ளவர்களை அனுப்புவது வழக்கமாக  இருந்து வருகிறது.

 

ஐ.ஜி. டாக்டர் செந்தில் குமாரி. ஐ.பி.எஸ்.

அதன் அடிப்படையிலேயே தான் இந்த அதிகாரிகளை அனுப்பி இருக்கிறது அரசு என்கின்றனர்.  ஆனால் இது குறித்து தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ள அதிகாரிகளின் உறவினர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது திட்டமிட்டே தமிழக அரசே பெண் அதிகாரிகளை பழிவாங்குகிறது.  செந்தில்குமாரி ஐஜி க்கு இடுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்து தற்போது குணமடைந்து வந்த நிலையில் அவரை உடனடியாக தேர்தல் பணிக்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.  அதேபோல மற்ற பெண் அதிகாரிகளுக்கும் சில உடல் நல பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐ.ஜி. மல்லிகா ஐ.பி.எஸ்

காவலர் பயிற்சி மையத்தில் வேலையில்லாமல் ஓப்பியடிக்கும் நிறைய போலீஸ் அதிகாரிகள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அது தவிர இன்னும் பல ஆண் உயர் போலிஸ் அதிகாரிகள் வேலை வெட்டி இல்லாமல் அரசு சம்பளத்தில் சொகுசாக வாழ்ந்து வருகிறார்கள்.  அப்படிப்பட்டவர்களை எல்லாம் பணிக்கு அனுப்பாமல் பெண்ணதிகாரிகளையே அனுப்பி இருப்பது தற்போது தமிழக காவல்துறையில் பேசு பொருளாக மாறி உள்ளது.  தமிழக காவல்துறையின் ஜால்ரா அடிப்பதும் சொம்பு தூக்குவதும் ஆமாம் சாமி போடுவதும் எந்த காலத்திலும் மாறாது என்கிறார் ஓய்வு பெற்ற ஒரு உயர் போலீஸ் அதிகாரி.

 

டி.ஐ. ஜி. லட்சுமி. ஐ.பி.எஸ்

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி தற்போது பதிவியிழந்த அதிகாரிகளும் முக்கிய பொறுப்பில் அங்கம் வகிக்கும் அதிகாரிகளும் அரசாங்கத்திற்கு ஆமாம் சாமி போட்டுக்கொண்டு ஆட்சி அதிகாரத்தில் இருப்பது காவல் துறையின் கண்ணியத்திற்கு எதிரானது . அதை எப்போதும் மாற்ற முடியாது என்கின்றனர் சில ஓய்வு பெற்ற பெண்  போலிஸ் அதிகாரி.

 

டாக்டர் தீபா சத்தியன் ஐ.பி.எஸ்.

லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள் எல்லாம் தங்களை காப்பாற்றிக் கொள்வதில் கவனமாக இருந்து பதவியை காப்பாற்றிக் கொள்கிறார்கள் ஆனால் தவறு செய்யாமல் கடைசியில் பழிக்கு ஆளாகி பதவியும் இழந்து நிற்பது பெண் உயர் அதிகாரிகள் தான் என்கின்றனர் சில நேர்மையான பெண் அதிகாரிகள்.

இதையும் படிங்க.!