chennireporters.com

காவல் நிலையத்தில் பிடிப்பட்ட சாராயத்தை கள்ள சந்தையில் விற்ற திருட்டு போலீசார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகர காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணி பகுதியில் கள்ளச்சந்தையில் விற்க்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் போலீசார் பத்திரபடுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 750 மது பாட்டில்களை இன்ஸ்பெக்டர் துனையுடன் காவலர்கள் ரோசையா, அரசு, நீலகண்டன், சேகர் உள்பட நான்கு காவலர்கள் மேற்படி மது பாட்டில்களை திருடி கள்ள சாராயம் விற்கும் சில்லறை வியாபாரி பார்த்தீபன் என்பவரிடம் கொடுத்து விற்பனை செய்ய சொல்லியுள்ளனர்.

இந்நிலையில் கள்ள சந்தையில் மது விற்பதாக எஸ்.பி.தனிப்படையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் குமார் என்பவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் உடனே அவர் சாராய வியாபாரி பார்த்தீபனை சம்பவ இடத்திற்கு சென்று கைது செய்ததாக கூறப்படுகிறது.

முக்கிய சாராய வியாபாரி யான அ.தி.மு.க.வை சேர்ந்த குமார் என்கிற புல்லி தலை மறைவாகி விட்டார்.

இது குறித்து திருத்தணி போலீசார் இன்னும் எந்த வித வழக்கும் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இது குறித்து விளக்கம் கேட்க நாம் சம்பந்தப்பட்ட தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமார் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்களை தொடர்புகொண்டோம் ஒருவரும் தங்களது போனை எடுக்கவில்லை.

இதுகுறித்து அவர்கள் விளக்கம் அளித்தால் அதை நாம் பதிவு செய்யத் தயாராக இருக்கிறோம்.

இந்த விஷயம் வருண பகவானுக்கே வெளிச்சம்.

இதையும் படிங்க.!