chennireporters.com

பெரம்பூர் இரவில் பொதுமக்களை மிரட்டும் குடிகார ட்ராபிக் எஸ்.ஐ.

பெரம்பூர் ரயில் பாதை மற்றும் முரசொலி மாறன் பாலம் கீழ் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதற்கு அருகில் உள்ள சுரங்க வழிப்பாதையில் no entry அறிவிப்பு பலகை இல்லாததால் தினந்தோறும் அவ்வழியே இரண்டு, மூன்று சக்கர வாகனங்கள் வழக்கம் போல் சென்று வருகின்றன.

ஆனால் நள்ளிரவு நேரத்தில் அங்கே நிற்கும் போக்குவரத்து காவலர்கள் அவ்வழியே செல்லும் வாகனங்களை மடக்கி, மிரட்டி அபராதம் விதிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

வியாழக்கிழமை (08.09.2022) நள்ளிரவில் பயணி ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையோடு மருத்துவமனைக்கு சென்று விட்டு அவ்வழியே ஆட்டோவிற்கான சென்ற போது அந்த ஆட்டோவை வாகனச் சோதனை என்கிற பெயரில் மடக்கி No Entry யில் வந்ததாக கூறி 1500ரூபாய் அபராதம் செலுத்தியாக வேண்டும், இல்லையேல் வண்டியை விடமாட்டேன் என்று போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலமுரளி என்பவர் குடிபோதையில் தகராறு செய்ததாக சம்பந்தப்பட்ட நந்தகுமார் என்கிற பயணி குற்றம்சாட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி அப்பகுதியில் அதிகாலையில் பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களின் வாகனங்களையும் அடிக்கடி மடக்கி 500ரூபாய் கொடுத்தால் தான் வண்டியை விடுவேன். இல்லையென்றால் போதை பொருட்கள் விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்து விடுவேன் எனக் கூறி மிரட்டி பணம் பறிக்கும் செயலில் பாலமுரளி அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, அந்த பகுதி வழியாக செல்லவே தாங்கள் அச்சப்படுவதாக பெரம்பூர் பகுதி பால் முகவர்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே வாகனச் சோதனை என்கிற பெயரில் அத்துமீறலிலும், பண வசூலிலும் ஈடுபட்டு வரும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பாலமுரளி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பெரம்பூர், முரசொலி மாறன் பாலத்தின் கீழ் உள்ள சுரங்க வழிப்பாதையில் இரண்டு, மூன்று சக்கர வாகனங்கள் செல்வது குறித்த முறையான வழிகாட்டுதல் பலகை வைக்க உத்தரவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் காவல்துறை இயக்குனர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

போக்குவரத்து உதவியாளர் பாலமுரளி பெரும்பாலும் இரவு நேர பணிக்கு தான் வருவாராம் வந்தவுடன் 11 மணிக்கு மேல் குடித்துவிட்டு இரவு நேரத்தில் ஒரு மாட்டோ மோட்டார் பைக் வேன் டிரைவர்களை மடக்கி மிரட்டி பணம் பறிப்பது தான் இவருடைய வேலையாம் அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் இவரை காக்கி சட்டை போட்ட ரவுடி என்றும் இரவில் இவரை சொல்லுகிறார்கள். பார்ப்பதற்கே மிக கொடூரமாக இருக்கும் இவர் மிரட்டியே பணம் பறிப்பாராம் இவர் அசிங்கமாகவும் அருவருக்கத்தகைய அருவருக்கத்தக்க வகையிலும் பொதுமக்கள் இவரை விமர்சிக்கிறார்கள்.

இதையும் படிங்க.!