chennireporters.com

#nia raid ntk விடுதலைப் புலிகளிடமிருந்து சீமான் பெயரில் பல கோடி நிதி பெற்ற சாட்டை முருகன்.

#nia raid ntk I விடுதலைப் புலிகளிடமிருந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை முருகன் என்பவர் பல கோடி நிதி திரட்டி மோசடியில் ஈடு பட்ட சம்பவம் அந்த கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#nia raid ntk #nia chennai #saattai duraimurugan #ltte #naam tamilar seeman #naam tamilar katchi #ltte funding

சாட்டை துரைமுருகன் மற்றும் சீமான்.

சீமான் பெயரை சொல்லி வெளிநாடுகளில் இருந்து சாட்டை துரைமுருகன் தன்னிச்சையாக விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்து பல கோடி ரூபாய் நிதி பெற்றதும் நாம் தமிழர் கட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதும் என்ஐஏ சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதியாகி உள்ளது.

இந்த சம்பவம் நாம் தமிழர் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்புடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பல ரகசிய தொடர்பு கொண்டு பல நூறு கோடி ரூபாய் சட்டவிரோதமாக பெற்றதாக கடந்த 2022ல் ஓமலூர் அருகே வெடிகுண்டுகள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் என்ஐஏ அதிகாரிகளிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தனர்.

பிப்.8ல் விசாரணைக்கு ஆஜராக நாதக நிர்வாகிக்கு உத்தரவு! NTK | NIA Raid | Investigation | Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery

அதில் தமிழ் ஈழ விடுதலை  புலிகளுக்கு இணையாக மற்றொரு புதிய அமைப்பை நிறுவி தமிழ்நாட்டில் ஆயுதப் போராட்டத்தை நடத்தவும் இதற்காக வெளிநாடுகளில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து நிதி உதவி பெற்றதாகவும் இந்த ஆயுதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பின்னணியில் இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

அதன் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் பல மாதங்களாக கண்கானித்து வந்தனர். வெளிநாட்டு நிதி நிறுவனம் நிதி தொடர்பான ஆதாரங்கள் பண பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட சஞ்சய் பிரகாஷ் , நவீன் சக்கரவர்த்தி ஆகியோரின் வாக்குமூலத்தில் கூறியபடி நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பு கொள்கை பரப்பு மாநில செயலாளர் சாட்டை துரை முருகன் கோவை ஆலந்துறை நாம் தமிழர் கட்சியை தொழில்நுட்ப பாசறை பிரிவு முன்னாள் நிர்வாகி ரஞ்சித் குமார் நாம் தமிழர் மாநில கொள்கை பரப்பு செயலாளர் இசைமதிவாணன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் விஷ்ணு பிரதாப் முன்னாள் நிர்வாகியாக சென்னை கொளத்தூர் பொறியாளர் பாலாஜி ஆகியோர் நேரடி தொடர்பில் இருந்தது உறுதியானது.

அதை தொடர்ந்து  என்ஐஏ அதிகாரிகள் திரட்டிய ஆவணங்கள் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை சாட்டை துரைமுருகன் ரஞ்சித் குமார் இசைமதி வாணன் ,விஷ்ணு பிரசாத், பாலாஜி ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ஒரு லேப்டாப் 7 செல்போன்கள் 8 சிம்கார்டுகள், மெமரி கார்டுகள், 4 பென்டிரைவ் விடுதலைப் புலிகளின் மற்றும் அதன் தலைவர் பிரபாகரன் தொடர்பான ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.

 

NIA raids multiple locations in J-K in terror-funding case : The Tribune India

என்ஐஏ அதிகாரிகள் இந்த ஆவணங்களை வைத்து ஆய்வு செய்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது வெளிநாடுகளில் இருந்து தடை செய்யப்பட்ட அமைப்புகளிடம் நிதி பெற்றது, தமிழகத்தில் ஆயுதப் புரட்சிக்கு தனியாக ஆட்களை திரட்டியது, வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் தயாரிக்க முயன்றது உறுதியாக உறுதியாகியுள்ளது. 

NTK Leader Seeman Condemns the NIA and ED Raids on PFI and SDPI Activists | 🎥 LatestLY

நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பான கொள்கை பரப்பு மாநில செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆயுதப் புரட்சிக்கு தேவையான நிதியை வெளிநாடுகளில் இருந்து பெறுவது தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளார். கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரை பயன்படுத்தி அவருக்கு தெரியாமல் தடை செய்யப்பட்ட செல்போன் செயலிகள்  மூலம் தன்னிச்சையாக வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்புகளிடம் பேசி மீண்டும் ஈழத்தில் புரட்சி செய்வோம். உதவி செய்யுங்கள் எனக் கூறி பல கோடி ரூபாய் நிதியை சட்ட விரோதமாக பெற்றது சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மூலம் உறுதியாகி உள்ளது.

சீமான் பெயரை பயன்படுத்தி கட்சியின் வளர்ச்சி நிதி என விடுதலைப் புலிகள் அமைப்புகளிடம் பெற்ற நிதியில் குறிப்பிட்ட தொகையை கட்சியின் வளர்ச்சிக்காக கொடுத்துவிட்டு பெரும் நிதியை சாட்டை துரைமுருகன் அரசுக்கு எதிராக தவறாக அவர் சொந்த செலவிற்கு பயன்படுத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Tamil Nadu: NIA raids multiple locations in the State linked to alleged LTTE funding case

அதோடு தடை செய்யப்பட்ட அமைப்புகளிடம் நிதி பெற்ற விவகாரத்தில் சீமானை சிக்க வைத்து கட்சியை சாட்டை துரைருமுருகன் கைப்பற்ற திரை மறைவில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டதும் கட்சியை கைப்பற்ற முடியவில்லை என்றால் இரண்டாம் கட்ட நிர்வாகிகளை ஒன்றிணைத்து சீமானுக்கு எதிராக விடுதலைப்புலிகளின் முழு ஆதரவுடன் கட்சியை உடைத்து தனி அமைப்பை உருவாக்குவதும் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டது வந்ததற்கான ஆவணங்கள் லேப்டாப் மற்றும் பென்டிரைவுகளில் இருந்துள்ளது.

வெடி பொருட்கள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட சஞ்சய் பிரகாஷ் நவீன் சக்கரவர்த்தி ஆகியோர் மூலம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த சாட்டை துரைமுருகன் முயற்சியில் ஈடுபட்டதும் அதற்கு துணையாக கபிலர் என்கிற கபிலன் என்பவரும் இருந்தது ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.  சீமானுக்கு தெரியாமல் உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிராக சட்டவிரோத செயல்கள் மற்றும் தமிழகத்தில் ஆயுதப் புரட்சிக்கு ஆட்கள் மற்றும் நிதி திரட்டிய சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக சோதனையில் வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் மேலும் நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலரை கைது செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத டெல்லியில் உள்ள என்ஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நா.த.க சாட்டை துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் NIA சோதனை.!! - Seithipunal

தடை செய்யப்பட்ட அமைப்புகளிடம் நிதி திரட்டி நாம் தமிழர் கட்சியை பிளவு படுத்த சாட்டை  துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சீமானுக்கு தெரியாமல் ஈடுபட்டது நாம் தமிழர் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க.!