chennireporters.com

மகளிர் உலக மல்யுத்தப் போட்டியில் இந்தியா பதக்கம்.

மகளிருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய பெண் சாதனை படைத்துள்ளார்.

நார்வே நாட்டின் ஒஸ்லோவில் நடந்த மகளிருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் முதல்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

57 கிலோ எடை பிரிவின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அன்ஷு மாலிக் அரையிறுதி போட்டியில் அதிரடியாக விளையாடி தன் திறமையை வெளிப்படுத்தினார்.

ஒஸ்லோவில் நடைபெற்ற இறுதி போட்டியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த சோலோமியா வின்னிக்கை 11.0 என்ற புள்ளிகளில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

இந்திய மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக் இந்த வெற்றியின் மூலம் நடப்பு போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு இந்திய விளையாட்டுத் துறை சார்பில் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அன்ஷூக்கு சமூக வலை தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

இதையும் படிங்க.!