பிரத்யேகமான செய்தி
திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே உள்ள செயிண்ட் அனீஸ் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
மாணவி எப்படி இறந்தார் இறந்ததற்கான காரணம் என்ன என்று மப்பேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த மாணவியின் உடல் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
க்காக வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் மாவட்டத்தில் எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காத வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் விரைவில் உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.
திருவள்ளுர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்து உள்ளது கீழச்சேரி கிராமம இந்த பகுதியில் செயின்ட் ஆனீஸ் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு உள்ள பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி சரளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவியின் உடலை கைப்பற்றி தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி எப்படி இறந்தார் இறப்புக்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த விடுதி மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மாணவியின் சொந்த ஊரான தெக்களூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஸ்ரீமதியின் மரணத்தை தொடர்ந்து இரண்டாவதாக பலியாகி இருக்கிறார் சரளா.
திருத்தணி தக்கலுரை சேர்ந்த சரளா அரசு தனியார் பள்ளி மற்றும் விடுதிகளுக்கு கடுமையான சட்டத்தை வகுக்க வேண்டும் என்கிறார்கள் பெண்ணின் உறவினர்கள்.