chennireporters.com

மது, மாமிசம், காம,களியாட்டம் இராமர் பற்றி Dr.அம்பேத்கர் விமர்சனம்.

#exclusive story

அயோதியில்  இராமர் கோயில் திறக்கப்பட்ட இன்று  இராமனின் ஒழுக்கம் குறித்து டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய  பதிவு  ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இராமனை ஒரு மன்னன் எனும் நிலையில் வைத்து ஆராய்வோம்:- அறநெறி பிறழாத இலட்சிய மன்னன் என இராமன் கருதப்படுகிறான். ஆனால் இந்த முடிவு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதா? உண்மை என்னவெனில் இராமன் மன்னனாயிருந்து ஒரு போதும் கோலோச்சவில்லை. பெயரளவில்தான் அவன் மன்னனாய் இருந்திருக்கிறான். ஆட்சிப் பொறுப்பு அனைத்தும் அவன் தம்பி பரதனிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது என்று வால்மீகியே சொல்கிறார். அரசாட்சி மற்றும் நாட்டுப் பரிபாலனத்திலிருந்து இராமன் முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டிருந்தான். இராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளை குறிப்பாகவும், தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகிறார்.

Samvidhan Diwas: 'Ek Mahanayak – Dr B.R. Ambedkar's Actors Talk About  Babasaheb's Contributions To The Indian Constitution

அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்குப் பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறை வேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் கழிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான்”

                        வால்மீகி

“இராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். அசோகவனம் எனும் அழகிய பூங்காவில் இந்த அந்தப்புரம் இருந்தது. அங்கு தான் இராமன் சாப்பிடுவது வழக்கம். இராமனின் உணவில் அருஞ்சுவைப் பொருட்கள் அனைத்தும் இடம் பெற்றன. மது, மாமிசம், பழவகைகள் உட்பட. இராமன் மதுவை அறவே தொடாதவன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்துகொள்ளச் செய்தான் என வால்மீகி குறிப்பிடுகிறார்”Book page image“அந்தப்புரப் பெண்களுடன் இராமன் வாழ்ந்து கழித்ததாய் வால்மீகி சொல்லும் விவரங்கள் அற்பமானவை அல்ல. அந்தப்புரத்தில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ் பெற்ற கிண்ணரி, உரகா மற்றும் அப்சரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்ணழகிகளெல்லாம் அந்த அந்தப்புரத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். இந்த அழகிகளின் மத்தியில் இராமன் குடித்து, கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் இராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர். பதிலாக இராமன் அப்பெண்களுக்கு மாலை அணிவிப்பானாம். வஞ்சியரின் வளையத்துள் கிடந்த ஆடவருள் இளவரசன் இராமன் முதல்வன் என்கிறார் வால்மீகி. இவை இராமனின் ஒருநாள் வாழ்க்கை நிகழ்ச்சிகளல்ல. இராமனுடைய வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளே இவை”ராமன் -பொருள் தெரியுமா? | Dinamalar“நாட்டு நிர்வாகத்தில் இராமன் எப்போதும் பங்கேற்றதில்லை என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். நாட்டு மக்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக்கூட இராமன் ஒருபோதும்கடைபிடிக்கவில்லை. தம்மக்கள் குறைகளை ஏதோ ஒருதடவை இராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தைக் குறிப்பிடுகிறார். அதுவும் ஒரு துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்திடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் இராமன். அப்படி செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் இராமன். அதுவே சூத்திரனான சம்புகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.Dr Babasaheb Ambedkar Writings and Speeches Volumes:1 -17 (English - H –  Tathagat LIVEஆதாரம்:-
1. உத்தரகாண்டம், சருக்கம் 42, சுலோகம் 27.
2. உத்தரகாண்டம், சருக்கம் 43, சுலோகம் 1.
3. உத்தரகாண்டம், சருக்கம் 42, சுலோகம் 8.

– கிளர்ச்சியாளர் ‘போதிசத்துவர்’ Dr B.R.அம்பேத்கர் -பாபாசாகேப் Dr B.R.அம்பேத்கர் அவர்களின்.பேச்சும் எழுத்தும், நூல் தொகுதி -8 பக்கம் – 462-463.

இதையும் படிங்க.!