chennireporters.com

சுடுகாட்டுக்கு பாதை இல்லாமல் தவித்த(Brahmins) பிராமணர்கள்.

செங்கற்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரத்தில்  25க்கும் மேற்பட்ட ஐயர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு திருப்போரூர் மீன் மார்க்கெட் அடுத்துள்ள ஏரிக்கரையோரத்தில் தனி சுடுகாடு உள்ளது. இது போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது.

Public petition to Chengalpattu District Collector | செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு

செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஐ.ஏ.எஸ்

நேற்று திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலில் பணியாற்றி வந்த சண்முகம் குருக்கள் என்பவர் காலமானார். அவரது உடல் அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது உரிய பாதை இல்லாததால் சேறும் சகதியுமாக இருந்ததால் வயலில் இறங்கி இறந்தவர் உடலை எடுத்துச்சென்றனர். உடன் சென்ற ஆண்களும் பெண்களும் பெரிதும் அவதிப்பட்டனர்.

இறப்பின் போது ஒவ்வொரு முறையும் இந்த சுடுகாட்டுக்கு செல்வதற்கு உரிய பாதை வசதி இன்றி ஐயர் சமூக (பிராமணர்கள்) மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். விவசாய காலங்களில் நிலைமை இன்னும் மோசமாக அமைந்து விடுகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி ஐயர் சுடுகாட்டுக்கு உரிய பாதை வசதி அமைத்து தந்து அவர்களின் துயர் போக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தான் சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதை இல்லை என்பதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் முதல் முறையாக இங்கே உயர் சமூகத்தினர் என்று தங்களை சொல்லிக்கொண்டு கொடி பிடித்துக் கொண்டு சாதிப் பெருமையை பேசி வரும் பிராமணர்களுக்கே இந்த நிலைமை என்றால் எங்கே போய் முறையிடுவது என்கின்றனர். திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சமரன் நாகன் என்பவர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும் என்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக இந்த இயக்கம் அவர்களுக்கு உதவி கரம் நீட்டும் என்று சமரன் நாகன் தெரிவித்தார்.

இந்த பிரச்சனையில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் செவி சாய்த்து இதை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் திருப்போரூர் கிராம பொதுமக்கள்.

இதையும் படிங்க.!