chennireporters.com

முதல்வர் ஸ்டாலின் கையெழுத்துப் போட்ட கார் விற்பனைக்கு இல்லை. ஹூன்டாய் நிறுவனம் முடிவு.

இந்தியச் சாலைகளில் 99 லட்சத்து 99,999 ஹூண்டாய் கார்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இவை எல்லோமே இந்த ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் ரெடியானவை. தனது 1 கோடியாவது காரைத்தான் நேற்று ரோல்–அவுட் செய்திருக்கிறது ஹூண்டாய்.

அதை ஹூண்டாய் தொழிற்சாலையில் இருந்து ஆசிர்வதித்து அனுப்பியவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் மாதம் 1998–ம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதிதான், ஹூண்டாய் தொழிற்சாலையில் இருந்து.

இந்தியாவின் முதல் டால்பாய் டிசைன் ஆன சான்ட்ரோவை ரோல்–அவுட் செய்து வைத்தார். இப்போது இந்த 23 ஆண்டுகளில், 1 கோடியாவது காரான அல்கஸாரை ரோல் அவுட் செய்து வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

ஹூண்டாயின் ஆரம்ப கால சான்ட்ரோவே பல லட்சங்கள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன.ஹூண்டாய், இந்த 25 ஆண்டுகளில் சான்ட்ரோவில் ஆரம்பித்து கோனா வரை கிட்டத்தட்ட 27 மாடல்களைத் தயாரித்திருக்கிறது.

இதில் டெராக்கன், டூஸான், கெட்ஸ் என்று ஃப்ளாப் ஆன கார்கள் மிகவும் குறைவுதான். ஆனால், இவை எல்லாம் இங்கே சொதப்பினாலும், ஏற்றுமதியில் கைகொடுத்துவிடும் என்பது ஹூண்டாய்க்குப் பெரிய பலம்.

1.5 லட்சம் ஊழியர்களை வைத்திருக்கும் ஹூண்டாய்க்கு உலகம் முழுக்க மொத்தம் 5,000 டீலர்ஷிப்கள் இருக்கின்றன. சுமார் 193 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது ஹூண்டாய்.

நேற்று காலை ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் விசிட் அடித்தார். 20–க்கு மேற்பட்ட டொயோட்டா இனோவா கார்கள் புடைசூழ, தனது டொயோட்டா லேண்ட்க்ரூஸரில் ஹூண்டாய் தொழிற்சாலைக்கு வந்திறங்கிய ஸ்டாலின், ‘‘இப்படியா பராமரிக்கிறாங்க!’’ என்று அதன் கட்டுமானத்தைப் பார்த்து வியந்து போனார்.

பெரிய தோட்டத்தில் சில மரக்கன்றுகளை நட்டுவிட்டு, R&D –யில் இறங்கிய அவர் கண்ணில் பட்ட முதல் விஷயமே – அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ‘அயானிக்’ எனும் எலெக்ட்ரிக் கார்.

பிறகு, ஹூண்டாய் அல்கஸார் காரில் கையெழுத்துப் போட்டு, ரோல்–அவுட் செய்து வைத்த ஸ்டாலின், அல்கஸார் எஸ்யூவியா; எத்தனை சீட்டர்; என்ன வகை கார்; எவ்வளவு விலை என்பதைக் கேட்டறிந்து கொண்டார்.

அல்கஸார் பானெட்டில் கையெழுத்துப் போட்ட அந்த கார்தான் ஹூண்டாயின் 1 கோடியாவது கார். இது விற்பனைக்கா; எந்த டீலருக்குப் போகும் என்று அதற்குள் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் உடன்பிறப்புக்கள்.

இதில் ஒரு ஸ்கூப் நியூஸ் என்னவென்றால், ‘‘தலைவர் கையெழுத்துப் போட்ட கார் என்ன ரேட்டுனு கேளுங்கய்யா… வாங்கிடணும்’’ என்று சில அமைச்சர்களே விசாரித்ததாகத் தகவல்.

பின்னர், ‘‘இது தொழிற்சாலையில் மொமென்ட்டோவாகப் பாதுகாக்கப்படும்’’ என்ற விஷயம் கேள்விப்பட்டதும் மனம் வாடிப்போனார்கள் ‘‘1996–க்கு முன்பு பூந்தமல்லியைத் தாண்டினால், இங்கே நகரம் இருப்பதே தெரியாது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் இப்போது உலகளவில் பிரபலம் என்றால், அதற்குக் காரணம் கலைஞரும் ஹூண்டாயும்.

என் தந்தை காலத்திலிருந்து ஹூண்டாய்க்கும் எங்களுக்கும் ஒரு நல்ல நட்பு இருந்து கொண்டே வருகிறது. அவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஹூண்டாயைத் தொடங்கி வைத்தார்.

இன்னும் அந்த நட்பை நாங்கள் தொடர்கிறோம்! அரசுக்குப் பல நேரங்களில் தோள் கொடுத்து உதவும் ஹூண்டாய்க்கு நன்றி!’’ என்று இந்த கொரோனா சூழலில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததற்கு நன்றி சொன்னார் ஸ்டாலின்.

இதையும் படிங்க.!