chennireporters.com

பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு. லஞ்சம் வாங்கிக்கொண்டு பத்திர பதிவு செய்த சப்-ரிஜிஸ்டர்.

சென்னை மாடம்பாக்கத்தில் வடபழநி முருகன் கோவிலுக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 நிலங்களை அபகரித்தது தொடர்பாக, வேளச்சேரி சார் – பதிவாளர் உட்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்தவர் பங்காருசாமி நாயுடு.1934, 1937ல், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் தாலுகா, மாடம்பாக்கத்தில் சுமார் 9. ஏக்கர் 86 சென்ட் நிலத்தை வாங்கினார்.

தீவிர முருக பக்தரான இவர், தான் வாங்கிய நிலத்தை, வடபழநி முருகன் கோவில் தேவஸ்தானத்திற்கு 1943ல் தானமாக செட்டில்மென்ட் எழுதி வைத்தார்.

ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 9ம் நாள் நடக்கும் உற்சவத்தை மிக விமரிசையாக நடத்தி வந்தார்.அவர் எழுதி வைத்த செட்டில்மெண்ட் இல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘என் மறைவுக்குப்பின் தானமாக அளித்த இந்த நிலத்தின் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை வைத்து, என் வாரிசுதாரர்கள் உற்சவ விழாவை சிறப்பாக நடத்த வேண்டும்.

அவ்வாறு முடியாத பட்சத்தில், அந்த அதிகாரத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து, உற்சவத்தை நடத்த வேண்டும்’ என, பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்.

அதன் அடிப்படையில், அந்த நிலத்திற்கான பட்டா, வடபழநி முருகன் கோவில் தேவஸ்தானத்திற்கு மாற்றப்பட்டுஉள்ளது.

நிலத்தை பங்காருசாமி நாயுடுவின் வாரிசுதாரரான மீரா காளிதாஸ் என்பவர் பராமரித்து வருகிறார்.

இந்நிலையில், மாடம்பாக்கத்தில் வடபழநி முருகன் கோவிலுக்கு சொந்தமான 9.86 ஏக்கர் நிலம் உட்பட, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள, 14 ஏக்கர் 80 சென்ட் நிலத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக, மர்ம நபர்கள் அபகரித்துள்ளனர்.

இது குறித்து, பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

அப்போது, தாம்பரம் சார் – பதிவாளராகவும், சேலையூர் சார் – பதிவாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்த விவேகானந்தன் உதவியுடன் நிலம் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது.

இவர், தற்போது சென்னை வேளச்சேரி சார் – பதிவாளராக உள்ளார். இவர் மீது, பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தனர்.

விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், கோரைக்கேணி என்ற கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமியின் மகன்கள் மணி, ரமேஷ் ஆகியோர் சொத்து தகராறில் ஈடுபட்டது போல நடித்துள்ளனர்.

இவர், 2017ல், மாடம்பாக்கத்தில், வடபழநி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், தன் தந்தை கந்தசாமிக்கு சொந்தமானது போல, போலி ஆவணங்கள் தயாரித்து, விவேகானந்தன் உதவியுடன் அபகரித்தது தெரிய வந்தது.

இதுபோல, ரமேஷ், மணி ஆகியோர் தந்தை உதவியுடன், 64க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார், விவேகானந்தன், கந்தசாமி, இவரது மகன்கள் மணி, ரமேஷ் ஆகிய நான்கு பேர் மீது ஊழல் தடுப்புச்

சட்டம், கூட்டு சதி, மோசடி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில் நகரங்களான காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் சென்னை தஞ்சாவூர் போன்ற முக்கிய இடங்களில் உள்ள சப் ரிஜிஸ்டர் கள் தல நில மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய ஆவடி திருவள்ளூர் மணவாளநகர் ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் சென்னை பொன்னேரி கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில்.

பணியாற்றிய , பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பத்திரப்பதிவு அதிகாரிகளின் சொத்து மதிப்பு பல கோடிகளை தாண்டும் என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும் சில நேர்மையான அதிகாரிகள்.

இதுதொடர்பாக தமிழக அரசு தனியாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஐபிஎஸ் அதிகாரி கொண்ட குழுவை அமைத்து.

விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தரவேண்டும்* என்று முருக பக்தர்கள் மற்றும் சிவன் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!