chennireporters.com

#EVM – மிஷினில் தேர்தல் நடத்துவதை அனுமதிக்க கூடாது. நந்தினி ஆனந்தன் கோரிக்கை.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் நந்தினி ஆனந்தன் என்பவர் EVM மிஷினுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது குடும்பத்துடன் தொடர்ந்து போராடி வருகிறார். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து EVM மிஷின் வாக்கு இயந்திரத்தில் வாக்களிப்பதை நிறுத்தி விட்டு வாக்கு சீட்டில் தேர்தலை நடத்தவேண்டும் நாட்டின் நலன் விரும்பும் அனைவரும் தனது போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்படி பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

Check Prime Minister Narendra Modi Exclusive Interview | Moneycontrol

🛑 எப்படியாவது மூன்றாவது முறை பிரதமர் ஆகி விட வேண்டும் என்ற பதவி வெறி மோடியைப் பிடித்து ஆட்டுகிறது.

🛑 ஆனால் மோடி 10 ஆண்டுகளாக பிரதமராக நீடிப்பதற்கு காரணமே EVM மோசடி தான் என்ற உண்மை நாடு முழுவதும் மக்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது.

🛑 மோடியின் பதவி வெறிக்காக நம்முடைய ஓட்டுரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்ற கருத்து ஆழமாக மக்களிடம் பரவி விட்டது.

🛑 முக்கியமாக பாஜக- வின் பலம் என்று கருதப்படும் வட இந்தியாவில் EVM எதிர்ப்பு என்பது கிராமங்கள் வரை பரவி விட்டது.

🛑 RSS பார்ப்பண- குஜராத் கொள்ளை கும்பலின் ஆதிக்கத்தால் வட இந்திய விவசாயிகளும் உழைக்கும் மக்களும் இளைஞர்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தங்களது கோபத்தை EVM எதிர்ப்பு போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.

Electronic voting in India - Wikipedia

🛑 வட இந்திய மக்கள் 2024 பாராளுமன்றத் தேர்தலை EVM- ல் தேர்தல் நடத்துவதை அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அங்கு நடக்கும் தீவிரமான EVM எதிர்ப்பு போராட்டங்கள் உணர்த்துகின்றன.

🛑 எதிர்கட்சிகள் EVM எதிர்ப்பில் தீவிரம் காட்டாவிட்டாலும் மக்கள் EVM எதிர்ப்பில் மிகத் தீவிரமாக உள்ளனர்.

🛑 ராமர் கோவில் திறப்பையெல்லாம் வட மாநில மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. மந்திர் அரசியல் அவர்களுக்கு சலித்து புளித்து விட்டது.

🛑 விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற அடிப்படை பிரச்சனைகளே மக்களின் கவலையாக உள்ளன.

🛑 கடந்த டிசம்பர் மாதம் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய மூன்று வட மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து EVM எதிர்ப்பு ஹிந்தி பேசும் மாநிலங்கள் முழுவதும் பெரிய விவாதமாக சமூக ஊடகங்களில் மாறியது.

🛑 இம்மூன்று மாநிலங்களிலும் EVM மோசடி மூலமே பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளதாக வட மாநில மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

🛑 ஹிந்தி சமூக ஊடகங்களில் இது பற்றிய கருத்துகள் தீவிரமாக பரவி தற்போது களப் போராட்டங்களாக மாறி விட்டன.

🛑 இரண்டு மாதங்களுக்கும் மேலாக இக்கருத்தே வட மாநில மக்களை ஆட்டிப்படைக்கிறது. பாஜக-RSS என்ன தான் முயன்றாலும் EVM எதிர்ப்புணர்வை பின்னால் தள்ள முடியவில்லை.

🛑 வெவ்வேறு விவாதங்களின் மூலம் மக்களை திசை திருப்பும் வழக்கமான பாசிச தந்திரமும் மக்களிடம் எடுபடவில்லை.

🛑 வட மாநிலங்களில் மட்டுமின்றி நாடு முழுவதும்” EVM-ஐ தடை செய்து வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்த வேண்டும்” என்ற கோரிக்கை மக்களிடம் வலுப்பெற்று வருகிறது.

What is EVM Full Form: Origin, Methods - CareerGuide

🛑 EVM மீதும் தேர்தல் ஆணையம் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்”. EVM- ல் தேர்தல் நடந்தால் EVM எந்திரங்களை உடைப்போம்”- என்ற முழக்கம் வட மாநிலங்களில் பரவி வருகிறது.

🛑 பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. மக்களின் EVM எதிர்ப்பு போராட்டங்களை கண்டு கொள்ளாமல் EVM- ல் தான் தேர்தல் நடத்துவோம் என்று பாஜக -வின் பிடியில் உள்ள தேர்தல் ஆணையம் பிடிவாதமாக உள்ளது இதே பிடிவாதத்தோடு EVM-ல் தேர்தல் நடத்தும் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டால் அது மக்களிடையே பெரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தும்.

🛑 மக்கள் விரும்பாத, ஏற்காத EVM எந்திரத்தை வலுக்கட்டாயமாக மக்கள் மீது திணித்தால் அது கடுமையான எதிர்விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும்.

🛑 EVM வேண்டாம், எந்திர வாக்குப்பதிவில் தங்களது ஓட்டுரிமை திருடப்படுகிறது, தேர்தல் ஆணையம் ஒரு திருடன் என்ற கருத்து பல கோடி மக்களிடம் ஆழமாகப் பதிந்துவிட்டது. இதை மாற்றுவது மிக கடினம். தேர்தல் நெருங்க நெருங்க இக்கருத்து மேலும் தீவிரமாக மக்களிடம் பரவும்.

🛑 EVM எதிர்ப்பானது ஆளும் வர்க்கத்துக்கு மிகப்பெரிய தலைவலியாக நெருக்கடியாக மாறிவிட்டது.

அடுத்து வரும் சில வாரங்கள் இந்திய அரசியலில் மிக முக்கியம் வாய்ந்தவை. நாட்டின் நலன் விரும்பும் அனைவரும் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனியுங்கள். என்று அறிக்கையில் நந்தினி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Does Election Commission Possess The Power To De-Register A Political Party

EVM-க்கு எதிரான தனது போராட்டம் தொடர்பாக ராகுல் காந்தியை சந்திக்க சத்தீஸ்கர் சென்று கொண்டிருக்கிறார் நந்தினி ஆனந்தன்.

காங்கிரஸ் MP ராகுல் காந்தி வட மாநிலங்களில்  நடத்தி வரும் பாரத் நியாய் யாத்திரையை EVM-க்கு எதிரான யாத்திரையாக மாற்ற வேண்டும் என வட மாநில மக்கள் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து ராகுல் காந்தியை வலியுறுத்துகின்றனர். ஆனால் ராகுல் காந்தி மக்களின் இக்கோரிக்கைக்கு இதுவரை செவி சாய்க்கவில்லை.

EVM | Electronic Voting Machine: What are EVM's? All about it

“ஈவிஎம் மெஷின் வேண்டாம், வாக்குச்சீட்டு கொண்டு வா” என இந்தியா முழுவதும் மக்கள் மிகப்பெரும் களப்போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரை நடக்கும் இடத்துக்கு நேரில் சென்று மக்களின் இக் கோரிக்கையை அவரிடம் நேரில் வலியுறுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். தற்போது அவர் சட்டிஸ்கர் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவரது யாத்திரைக்கு சென்று நேரில் சந்தித்து EVM- க்கு எதிராக உறுதியான நிலைபாடு எடுக்குமாறு வலியுறுத்துவதற்காக மதுரையில் இருந்து நானும் அப்பாவும் சத்திஸ்கர் சென்று கொண்டிருக்கிறோம். (08.02.24 )

 

இதையும் படிங்க.!