நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டது இந்திப் படவுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது மும்பை போலீசார் 1400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் ராஜ்குந்த்ராவின் மொபைல் போன், லேப்டாப்,

ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் அதில் 119 ஆபாச படங்கள் இருந்ததும் அதை பல கோடி ரூபாய்க்கு அவர் விற்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோக்களை படம் பிடித்து விற்பனை செய்வதாக மும்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஜூலை மாதம் கைது செய்யப்பட்டவர் ஒரு மாதத்திற்கு பின்பு நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். இந்திப்பட உலகில் ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.