Chennai Reporters

போலீ ஆவணங்கள் மூலம் ரூ.97 லட்சம் மோசடி செய்த வங்கி பெண் மேலாளர் கைது….

உமா மகேஸ்வரி

போலி ஆவணங்கள் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட வங்கி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கியதாக, 97 லட்சம் ரூபாய் மோசடி செய்த, வேலுார் மத்திய கூட்டுறவு வங்கியின் பெண் மேலாளரை, வணிக வரி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், வேலுார் அரியூரை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி, 38. இவர், வேலுார் மத்திய கூட்டுறவு வங்கி, வேலுார் கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த, 2018 – 19ல் குடியாத்தம் கிளையில் மேலாளராக பணியாற்றியபோது, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கியதாக, போலி ஆவணங்கள் தயாரித்து, 97.37 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.

வேலூர் சரி போலீஸ் டி.ஐ.ஜி. ஆன்னிவிஜயா இ.கா.ப

கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி புகார்படி, வேலுார் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இதனால், உமா மகேஸ்வரி, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது.

வணிக குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில், உமா மகேஸ்வரி போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததும், மோசடி செய்த பணத்தில் சென்னை, வேலுார், காட்பாடியில் வீடு, வீட்டு மனை வாங்கியதும் உறுதியானது இதையடுத்து உமாமகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!