Chennai Reporters

சென்னையில் எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு.

முன்னாள் முதல்வர் மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அருகே உள்ளது இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடமும் உள்ளது.

அந்த இடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக வினர் அனைவரும் வந்திருந்தார்கள்.

ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு எடப்பாடி பழனிச்சாமியின் கார் வெளியே கிளம்பும் போது சசிகலா அவர்களும் அஞ்சலி செலுத்த வந்தார்.இதனால் அந்த பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

உடனே காவல்துறையினர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கார் போக வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.கார் மெதுவாக சென்று கொண்டிருந்தது.

அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் எடப்பாடியின் கார் மீது செருப்பை தூக்கி அடித்தார். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது.எடப்பாடியின் கார் மீது செருப்பு வீசும் அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!