அரியானா மாநிலம் பிவானி என்ற பகுதியில் ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அங்கு நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் அனுமன் வேடம் அணிந்த நபர் மேடையிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் அவர் நாடகத்திற்காக நடிக்கிறார் என்று பார்வையாளர்கள் அவரை காப்பாற்றாமல் போனதால் அவர் உண்மையிலேயே இறந்ததை கூட உணராமல் வேடிக்கை பார்த்திருந்த செய்தி அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராம்லீலா நிகழ்ச்சியில், ஹனுமான் வேடம் அணிந்த நடித்துக் கொண்டிருந்த கலைஞர் ஹரிஷ் மேத்தா மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே உயிரிழப்பு!
ராம்லீலா நிகழ்ச்சியில் ஏற்பட்ட சோகம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவின்போது, ஹரியானா மாநிலம் பிவானியில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில், ஹனுமான் வேடம் அணிந்து நடித்துக் கொண்டிருந்த கலைஞர் ஹரிஷ் மேத்தா மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே உயிரிழப்பு!
இது நாடகத்தின் ஒரு பகுதி என நினைத்து மக்கள் யாரும் அவரை காப்பாற்ற முன்வராத நிலையில், நீண்ட நேரம் அவர் எழுந்திருக்காமல் இருப்பதை உணர்ந்து பதறிப்போய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இராமனுக்கு பக்கபலமாக இருந்து சீதையை மீட்க பாடுபட்ட ஆனுமனை காப்பாற்ற இராமன் வரவில்லையே என்று அங்கிருந்தவர்கள் கதறி அழுத காட்சி பார்போரை சோகத்தில் ஆழ்த்தியது.