chennireporters.com

வாழும் வரை போராடுவேன். வெங்கடேசன் தாத்தாவின் தன்னம்பிக்கை.

இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு நடுவில் நாம் பார்த்த அந்த காட்சி கண்களில் கண்ணீரை வர வைத்தது .

உழைத்து வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தது அந்த காட்சி ஏறக்குறைய 90 வயதை தாண்டி இருந்த அந்த பெரியவர்.

பழைய மிதிவண்டியில் அடுப்பெரிக்க பனை மரத்தின் சருகுகளை எடுத்து சைக்கிளில் கட்டி வைத்து வளைந்த அந்த முதுகோடு சைக்கிளில் தள்ள முடியாமல் தள்ளி சென்ற காட்சி பார்த்த நமது  இதயத்தை உடைத்து விட்டது.

நாம் அவரை தடுத்து நிறுத்தி கேட்டோம் வீட்டில் யாரும் இல்லையா இப்படி முடியாத தருணத்தில் இந்த வயது முதிர்ந்த காலத்தில் ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள் என்று கேட்டதற்கு யாரும் இல்லை என்னால் சிலிண்டர் வாங்க பணம் இல்லை நானும் என் மனைவியும் இரண்டு பேர் தான் இருக்கிறோம்.

 

சாப்பிட வழியில்லை அடுப்ப எரிக்க இதை எடுத்துச் சென்றால்தான் அடுப்பெரிக்க முடியும் என்று சொன்னார்.

திருவள்ளுவர் அடுத்த புள்ளரம்பாக்கம் எனும் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் பெரியவர்.  வயது 90 கடந்திருக்கும் உழைத்து வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக இன்னும் சில முன்னோர்கள் கிராமங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு உதாரணம் இந்த வெங்கடேசன் தாத்தா .

வறுமையின் பிடியில் வாழ்ந்தாலும் வாழும் வரை உழைத்து வாழவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் வெங்கடேசன்  இளைய தலைமுறையினருக்கு  இவர் ஒரு பெரிய சாட்சி.  நாம் அவருக்கு ஒரு வேலை உணவிற்கு தேவையான உதவியை மட்டும் செய்துவிட்டு அவருடைய உறுதி கொண்ட நெஞ்சிற்கு ஒரு சிரம் தாழ்ந்த வணக்கம் சொல்லி விடைபெற்றோம்.

இதையும் படிங்க.!