ஜெயிலர் திரைப்படத்தை தயாரித்து கோடிக்கணக்கில் சம்பாதித்த கலாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தினர் எவருமே மண் சோறு சாப்பிடாத போது முட்டாள் ரசிகர்கள் மண் சோறு சாப்பிடுவது அவமானம் என்று செய்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அம்மன் கோயிலில் ரசிகர்கள் ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று அங்கப்பிரதட்சணம் செய்து மண் சோறு சாப்பிட்ட செய்து விவாதப்பொருளாகி உள்ளது.
ஜெயிலர் படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய ரஜினி அவரது மனைவி, மகள்கள், மருமகன்கள், பேரன்கள் என எவருமே மண் சோறு சாப்பிடாத போது, அந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நாடு எங்கே போகிறது என்பதை கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த படத்தை இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
72 வயதிலும் தன்னால் சினிமாவில் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டிய ரஜினி இந்த படத்தில் நடிக்க சம்பளமாக 110 கோடி ரூபாய் வாங்கியுள்ளார்.
அவரும் அவர் குடும்பமும் சுகபோகமாய் வாழ்வதற்கு இன்னும் எத்தனை காலம்தான் தமிழக ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைப்பார் என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். இன்னும் வாழ்வின் எதார்த்தத்தை புரிந்து கொள்ளாத ரஜினி ரசிகர்கள் தனது குடும்பத்தை பார்க்காமல் பெரிய பெரிய கட்டவுட் வைத்து பாலபிஷேகம் செய்து தன்னுடைய பணத்தை இப்படி செலவழிப்பது மூடத்தனம் இது போன்ற முட்டாள்தனமான செயல்களை செய்வது அவமானத்தின் உச்சம் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.