chennireporters.com

பல கோடி வரி ஏய்ப்பு செய்த சரவணா ஸ்டோர்.

பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் மீது மத்திய வருமான வரித் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் புரசைவாக்கம், போரூர், தி.நகர், குரோம்பேட்டை , நெல்லை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளில் உள்ள சரவணா ஸ்டோர் நிறுவனங்களுக்குச் சொந்தமான 37 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை கணக்கு காட்டாமல் மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த நான்கு நாட்களாக சூப்பர் சரவணா ஸ்டோர் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 37க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் சோதனை நடை பெற்ற இடங்களில் அதிக அளவு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .அதன் மூலம் வந்த பணத்தை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் சரவணா செல்வரத்தினம் குழுமம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கணக்கில் வராத பல கோடி தங்கம் ஜவுளிகள் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க.!