chennireporters.com

தேவர் ஜெயந்தி விழாவில் செருப்பை பாதுகாக்க போலீசாரை நியமித்து கலெக்டர் உத்தரவு.

      பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
               நினைவு நாளில், முக்கிய பிரமுகர்கள்
                செருப்பை பாதுகாக்க காவல்துறையை
                நியமித்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் கமுதி தாசில்தார்.

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 ஆம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழா பசும்பொன்னில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு வரும் அரசியல்வாதிகள் மற்றும் விஐபிகளின் சிறப்புகளை பாதுகாக்க போலீசார் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களை நியமித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும் கமுதி வட்டாட்சியரும் உத்தரவிட்டுள்ள செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதில் நான்கு காவலர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். என்றும் அவர்களது தொலைபேசி எண்களும் அதில் பதிவிடப்பட்டுள்ளது.   இவர்கள் தேவர் ஜெயந்திக்கு வரும் விஐபியின் செருப்புகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் சுயமரியாதை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காத மாவட்ட ஆட்சியரும், தாசில்தரும் ,காவலர்களையும், வருவாய்த்துறை ஊழியர்களையும் செருப்பை காவல் காக்க வேண்டும்  போட்ட உத்தரவு மிகப்பெரிய தவறான போக்கு என்கின்றனர் சில சமூக ஆர்வலர்கள்.

இதையும் படிங்க.!