chennireporters.com

ஆரியர்களின் ”தீபாவளி உருட்டும்” அயோத்திதாச பண்டிதரின் ஆய்வும்..

#deepaoli special story#

தீபாவளி வரலாறு தீபாவளி பண்டிகை என்பது தீபாவளி அல்ல. தீப ஒளி பண்டைய தமிழகத்தில் பல்வேறு பௌத்த மடாலயங்கள் இருந்தன அதில் உள்ள பௌத்தப்பிக்குகள் சித்தர்கள் எனப்படும் சித்தார்த்த கௌதம புத்தரின் சீடர்கள் மக்களுக்கு புத்தரின் தம்ம உபதேசங்களை செய்ததோடு கடும் நோய் கண்ட காலங்களில் மக்களை நோய்களிலிருந்து காப்பாற்றுவதற்காக தாவரங்களிலிருந்து மருந்துகளை ஆய்வு செய்து அதை தானே உண்டு பரிசோதித்து பின்னர் மக்களுக்கு அளிப்பது வழக்கமாகும்.

அந்த வகையில் எள் எனும் தானியத்தில் இருந்து எண்ணெய் கண்டறிந்த பௌத்த பிக்குகள் பள்ளி என்ற நாட்டின் அரசன் பகுவன் என்பவரிடம் தெரியப்படுத்தி எள் என்ற தானியம் அதிலிருந்து வரும் எண்ணெய் காசநோயை குணப்படுத்துகிறது,  என்றும் உடலுக்கு குளிர்ச்சியையும், வலுவையும், உடல் அழகையும், கண்கள் ஒளி பெறும் என்றும். இருளை அகற்றுவதற்காக அந்த எண்ணையை உபயோகிக்கலாம் என்றும் கூறியதன் பேரில் உணவாக பயன்படுத்தத்தக்கது என்பதை கேட்ட பள்ளி என்ற நாட்டின் அரசன் பகுவன் நாட்டு மக்களுக்கு எள் எண்ணெயை தலையில் தேய்த்து அனைவரும் தீபவதி என்ற நதியில் நீராடும்படி கூறினார். அதன் அடிப்படையில் அன்று முதல் மக்கள் தலையில் எள் எண்ணெயை தேய்த்து குளிக்க தொடங்கினர்.

அதோடு எள் எண்ணெயில் பலகாரங்களை செய்து உண்டு மகிழ்ந்ததோடு உறவினர்களுக்கு நண்பர்களுக்கும் அந்த பலகாரங்களை அளித்து மகிழ்ந்தனர் அதுவே தீபவதி பண்ட ஈகை திருநாள். அதன் தொடர்ச்சியாக இன்று வரை தமிழக மக்கள் ஐப்பசி மாதத்தில் தலையில் எள் எண்ணையை தேய்த்து தீபாவளி பண்டிகை அன்று தலைமுழுகி என்னை பலகாரங்களை உண்டு மகிழ்கின்றனர். தீபாவளி பலகாரங்களை உறவினர்களுக்கு அளித்து மகிழ்கின்றனர்.

ஆனால் பின்னால் வந்த பார்ப்பன சக்திகள் தீபவதி நதியில் குளித்த எண்ணெய் குளியலை மறைத்து திரித்து நாக அசுரனை அதாவது நரகாசுரனை கொன்ற நாள் தீபாவளி என பொய் புரட்டுகளை கூறி மக்களை திசை திருப்பி வருகின்றனர். பழந்தமிழ் அறிஞர் அயோத்திதாசர் இவற்றுக்கு ஆதாரமாக ஓலைச்சுவடி காலத்து பழந்தமிழ் நூலான வைத்திய சிந்தாமணி என்ற நூலில் இருந்து எள் எண்ணெயின் மருத்துவ குணங்களை நமக்கு கோடிட்டு காட்டுகிறார்.

 

அண்ணல் அம்பேத்கருக்கு இணையாக பழந்தமிழ் ஆதாரங்களை கண்டெடுத்து நிரூபிப்பதில் வல்லவர் பல மொழிகளில் புலமை பெற்ற பழந்தமிழ் அறிஞர் அயோத்திதாச பண்டிதர் புகழை போற்றுவோம். எள் எண்ணெயை தலை உடல் முழுதும் தேய்த்து குளித்து உடலை நோய்களிலிருந்து மீட்டு உடல் வலிமையும் முகப்பொலிவும் பெறுவோம். எள் எண்ணெயில் செய்த பலகாரங்களை உற்றார் உறவினர்களுக்கு அளித்து மகிழ்வோம் பௌத்த தம்மத்தில் திளைப்போம்.

பழங்காலத்தில் புத்தரின் தன்மத்தை இந்தியா முழுவதும் பரவச் செய்த நாக அரசர்களை இந்திய பூர்வ குடிகளான தமிழர்களான நாகர்களை நாக அசுரர்களை தேவர்கள் கொன்றுவிட்டதாகவும் நரகா சுரர்களை ( நாக + அசுரன் ) வீழ்த்திய தினம் எனும் பார்ப்பனிய புளுகு மூட்டைகளை தூக்கி எறிவோம். தேவர்கள் என்பவர் பழந்தமிழ் நூல்களில் பிராமணர்களை குறிக்கும். அப்படியானால். தமிழர்களான நமது முன்னோர்களை கொன்ற விழாவை நாம் கொண்டாடுவோமா ?

 

ஒரு நபர் இறந்து போனதை உலகில் எந்த சமூகமாவது கொண்டாடுமா என்பதை நடுநிலையோடு ஆய்வு செய்யுங்கள். பட்டாசு வெடித்து கொண்டாடி நாம் உயிர் வாழும் சுற்றுச்சூழலை விஷமாக்கும் கேலிக்கூத்தை நிறுத்துங்கள்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு இனங்கள் இந்திய மண்ணில் வந்திருக்கிறது சென்றிருக்கிறது மறைந்திருக்கிறது ஆனால் உண்மையில் இந்தியாவின் பூர்வ குடிகள் நாகர்களே தமிழர்களே என டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் தனது வரலாற்று ஆய்வில் நிரூபித்திருக்கிறார். தான் ஒரு மராட்டியராக இருந்தாலும் தமிழர்களே இந்தியாவின் பூர்வ குடிகள் என விருப்பு வெறுப்பு இல்லாமல் உண்மையான வரலாற்றை நடுநிலை மனதோடு வெளிப்படுத்தி இருக்கிறார்.

எதிர்காலத்தில் வரும் வரலாற்று மாணவர்கள் இந்திய சமூகத்திற்கு நான் ஆற்றி இருக்கும் பங்கை வெறுப்பு வெறுப்பு இன்றி ஆய்வு செய்வார்கள் ஆனால் இந்திய சமூகத்திற்கு நான் ஆற்றியிருக்கும் மிகப்பெரிய பங்களிப்பை அவர்களால் உணர முடியும் என நம்புகிறேன் என அண்ணல் அம்பேத்கர் கூறி இருக்கிறார்.

ஆகவே தமிழர்களே நாகர்களே இந்திரர் (இந்திரன் – புத்தன் தமிழ் அகராதி) தேசத்தின் அரசர்களின் நாக ராஜாக்களின் வழி தோழர்களே தீபவதி நதி குளியலையும் பண்டங்கள் ஈகை செய்யும் திருநாளில் பண்ண்டங்களை உறவினர்களுக்கு அளித்து எள் எண்ணெயின் உபயோகத்தை அறிந்து தெளிந்து மகிழ்வோடு இருங்கள் வாழ்த்துக்கள்.

இதையும் படிங்க.!